Published:Updated:

சேலம்: கறி விருந்து சமைக்கும்போது சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து! - 6 பேர் காயம்

தீ விபத்து

சமைக்கும்போது காஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

சேலம்: கறி விருந்து சமைக்கும்போது சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து! - 6 பேர் காயம்

சமைக்கும்போது காஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

Published:Updated:
தீ விபத்து

சேலம், நெத்திமேடு பகுதியில் வரதராஜ், கஸ்தூரி தம்பதியர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு சுதாகர் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், தம்பதியர் உறவினர்களை அழைத்து வீட்டில் கறி விருந்துக்காக உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

சேலம்: கறி விருந்து சமைக்கும்போது சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து! - 6 பேர்  காயம்

தீ விபத்து காரணமாக சுதாகர், அவர் உறவினர்கள் ராணி, காவியா, குழந்தைகள் வருஷாஸ்ரீ, துவாரகன், பிரவீன் ஆகிய ஆறு பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத் தீ விபத்தில் வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதற்கிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேரையும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மேலும் முழுகவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.