Published:Updated:

சமூக விலகல், கொரோனா விழிப்புணர்வு! -தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்

தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்
தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்

மாஸ்க் அணியாமலும் சமூக விலகலை சரியாகக் கடைப்பிடிக்காமலும் காய்கறிகளை வாங்கிச் சென்றவர்களிடம் ஜெர்மனியைச் சேர்ந்த ஈவோ, சமூக விலகலின் அவசியத்தைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், வரிசையைக் கடைப்பிடித்து காய்கறிகள் வாங்கிச்சென்றுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய தேவை தவிர்த்து பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். தேவைப்பட்டால், தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொறுப்பற்ற சிலர், பல இடங்களில் சமூக விலகல் வரிசையைக் கடைப்பிடிக்காத நிலைதான் தற்போது உள்ளது. இந்த நிலையில்தான், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், தனிமனித விலகலை முறையாகக் கடைப்பிடித்து காய்கறிகளை வாங்கிச் சென்றதோடு, அங்கு தன்னார்வலர்களாகப் பணிபுரிந்தவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து நெகிழ வைத்துச் சென்றுள்ளார்.

தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்
தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்

ஜெர்மனியைச் சேர்ந்த ஈவோ என்பவர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் செயல்பட்டு வரும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் முனைவர் பட்டம் பெற்று, அந்த நிறுவனத்திலேயே தங்கி தன்னார்வலராகப் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில், ஈவோ காய்கறிகளை வாங்குவதற்காக இலுப்பூர் பேருந்து நிலைய காய்கறி சந்தைக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில், மாஸ்க் அணியாமலும் தனிமனித விலகலை சரியாகக் கடைப்பிடிக்காமலும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்களிடம், தனிமனித விலகலின் அவசியத்தை எடுத்துக் கூறிய ஈவோ, தானும் தனிமனித விலகலைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதைப்னைப் பார்த்த, தன்னார்வலராகப் பணிபுரிந்த இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் வேலுச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர், ஈவோவைப் பாராட்ட, அவரோ... `உங்களுக்குதான் நான் வாழ்த்துக் கூற வேண்டும். பொதுமக்கள் நலனுக்காக, தன்னார்வலராகப் பணியாற்றி வருகின்றனர்' என்று அவர்களுக்கு நன்றி சொல்லி, அவர்களை நெகிழவைத்துச் சென்றுள்ளார்.

தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்
தன்னார்வலர்களை நெகிழ வைத்த ஜெர்மனிக்காரர்

இதுபற்றி தன்னார்வலர்களிடம் கேட்டபோது, "பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், உடனே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பலரும் சொல்வதைக் கேட்டுக்கொள்கின்றனர். ஆனால், சிலர் மட்டும் அதில் விதிவிலக்கு. ஈவோவைப் போன்று அனைவரும் தங்களுக்குத் தாங்களே தனிமனித இடைவெளியைப் பின்பற்றினால், எந்த வித நோயும் நம்மை அவ்வளவு எளிதில் தாக்க முடியாது. இதுபோன்று தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் போது, எங்களால் மேலும் சிறப்பாகப் பணி செய்ய முடியும்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு