Published:Updated:

`என் தலைவனுக்கு வழிவிடமாட்டியா?'- அரசு பஸ் டிரைவர், பயணிகளைத் தாக்கிய ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள்

அரசுப் பேருந்து
News
அரசுப் பேருந்து

இதுபோன்ற சம்பவத்தை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு மோசமாகப் பேசி தாக்கினர். கேள்வி கேட்ட அனைவரையும் தாக்கவந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து நேற்று மதியம் பழநிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று ஊட்டி குன்னூர் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. பேருந்து அரவங்காடு அருகில் உள்ள பாய்ஸ் கம்பெனி அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கார் இந்த அரசுப் பேருந்தை முந்திச்சென்று குறுக்கே நின்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்

அந்த காரில் இருந்து இறங்கிய சிலர், `என் தலைவனுக்கே வழிவிட மாட்டியா 'என பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். என்ன நடக்கிறது என தெரியாமலே நடக்கும் இந்தத் தாக்குதலைப் பார்த்த பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகள் ஓட்டுநரைக் காப்பாற்ற முயன்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் நடத்துநரையும், பெண்கள் என்று கூட பாராமல் பயணிகள் சிலரையும் ஆபாச வார்த்தையில் திட்டித் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவத்தைப் பார்த்து அருகில் வந்த சிலரையும் மூர்க்கத்தனமாக திட்டியது அந்தக் கும்பல்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்

நடு ரோட்டில் அரசுப் பேருந்தை வழி மறித்து ஓட்டுநர் மற்றும் பயணிகளைத் தாக்கிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் ஆத்திரமடைந்த பலரும் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் செய்தி ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளுக்குப் பரவ இந்தச் சாலையில் ஓடிய எல்லா அரசுப் பேருந்துகளையும் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்தச் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் பாபு பேசுகையில், ``நான் குன்னூர் கிளையில் ஓட்டுநராக உள்ளேன். ஊட்டி - பழநி பேருந்தை இயக்கி வருகிறேன். வழக்கம்போல் அருவங்காடு பகுதிக்கு வந்தபோது நான்கைந்து வாகனங்கள் வரிசையாக வந்தன. அதில் இரண்டு வாகனத்தில் வந்தவர்கள் பேருந்தை மறித்து `என் தலைவனுக்கே வழிவிட மாட்டியா?' என என்னைத் தாக்கினர்.

தடுக்க வந்தவர்களையும் தாக்கினர். எதற்காகத் தாக்கினர் என்று தெரியவில்லை. மக்கள் சேவைப் பணியில் உள்ள எங்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுநர் பாபு
தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுநர் பாபு

இந்தப் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் கூறுகையில் ``இதுபோன்ற சம்பவத்தை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். குண்டர்களைப் போல அவ்வளவு மோசமாகப் பேசி தாக்கினர். கேள்வி கேட்ட அனைவரையும் தாக்க வந்தனர்.

பட்டப்பகலில் பொதுமக்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பேச்சுவார்த்தையில் போலீஸார்
பேச்சுவார்த்தையில் போலீஸார்

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ``ஊட்டியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் அவரது கட்சியினர் வாகனங்களில் வரிசையாக வந்துள்ளனர். ஒரு வாகனத்தில் ஜான் பாண்டியன் இருந்துள்ளார். இந்த வாகனத்துக்கு அரசுப் பேருந்து வழிவிடவில்லை எனத் தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டனர்" என்றனர்

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். மூன்று மணி நேரத்துக்குப்பின் பேருந்துகள் இயங்கின. இந்நிலையில் நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஊட்டி நகர செயலாளர் அபு அலி அப்பாஸ் , குன்னூர் இளைஞர் அமைப்பு பொறுப்பாளர் உதயகுமார் ஆகிய இருவர் மீது வெல்லிங்டண் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.