Published:Updated:

சுட்டிக்காட்டிய விகடன்; களத்தில் இறங்கிய அதிகாரிகள் - புத்துயிர் பெறும் தேனி காந்தி பூங்கா!

காந்தி பூங்கா

காந்தி பூங்காவின் அவலநிலை குறித்து, நம்முடைய விகடன் இணையதளத்தில் அண்மையில் நாம், `சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளிக்கும் காந்தி பூங்கா! - சீரமைக்கப்படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

சுட்டிக்காட்டிய விகடன்; களத்தில் இறங்கிய அதிகாரிகள் - புத்துயிர் பெறும் தேனி காந்தி பூங்கா!

காந்தி பூங்காவின் அவலநிலை குறித்து, நம்முடைய விகடன் இணையதளத்தில் அண்மையில் நாம், `சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளிக்கும் காந்தி பூங்கா! - சீரமைக்கப்படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Published:Updated:
காந்தி பூங்கா

தேனி மாவட்டம், கம்பம் பார்க் ரோட்டில் அமைந்திருக்கிறது காந்திஜி பூங்கா. இந்தப் பூங்கா சுமார் 20 ஆண்டுகளாக எந்தவிதப் பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. பூங்காவின் இந்த அவலநிலைக்கு அதன் ஒரு பகுதி உழவர் சந்தையாக மாற்றப்பட்டதுதான் காரணம் என அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டிவந்தனர். உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகள் அந்தப் பூங்காவை முறையாகப் பராமரிக்காததால் சுகாதாரமற்றுக் கிடந்தது.

காந்தி பூங்கா
காந்தி பூங்கா

அதேபோல, இரவு நேரங்களில் இந்த காந்தி பூங்காவைச் சமூக விரோதிகள் சிலர் மது அருந்தும் கூடாரமாகவும் தங்கள் பிடியில் வைத்திருந்தனர். இதனால், அந்தப் பூங்கா பகுதிக்கு மாலை நேரமாகிவிட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்வதற்கே அச்சப்பட்டுவந்தனர். காந்தி பூங்காவின் அவலநிலை குறித்து, பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வந்தன. நம்முடைய விகடன் இணையதளத்திலும் அண்மையில் நாம், `சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளிக்கும் காந்தி பூங்கா! - சீரமைக்கப்படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காந்தி பூங்கா
காந்தி பூங்கா
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ஆகியோரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் காந்தி பூங்காவைச் சீரமைக்கும் பணிகளில் இறங்கியிருக்கின்றனர்.

காந்தி பூங்கா
காந்தி பூங்கா

சிதிலமடைந்த பூங்காவைச் சீரமைத்து, பூங்காவின் மையத்தில் யோகா மையம், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

காந்தி பூங்கா
காந்தி பூங்கா
காந்தி பூங்கா
காந்தி பூங்கா

20 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்த காந்தி பூங்கா புத்துயிர் பெற்றுவருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism