Published:Updated:

ராமநாதபுரம் வினாத்தாள் லீக் விவகாரம்-ஆசிரியரைப் பழிவாங்க மற்றோர் ஆசிரியரே போட்ட சதித்திட்டம் அம்பலம்

மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாள்

ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளியில் தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்கு வினாத்தாளை லீக் செய்ததா சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியரே இந்தச் செயலைச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான அறிவியல் பாடப் பருவத் தேர்வு இன்று நடைபெறவிருக்கிறது. இதற்காக ராமநாதபுரம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வினாத்தாளை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் நேற்று வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் தேர்வுக்கான வினாத்தாளை நேற்றே மாணவர்களுக்கு வழங்கியதாகச் சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வினாத்தாளை வெளியிட்டதாக கூறப்படும் பள்ளி
வினாத்தாளை வெளியிட்டதாக கூறப்படும் பள்ளி

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலு முத்துவிடம் பேசினோம். ``அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்றிருப்பதால், மற்றோர் ஆசிரியர் ஜெயக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்திருக்கிறார். அவர் அறிவியல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கி படிக்குமாறு கூறியுள்ளார். இதை உள்நோக்கத்துடன், பழிவாங்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் அதே பள்ளியில் பணியாற்றும் மற்றோர் ஆசிரியர் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்றைய அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக பீரோவில்தான் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்

சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் தேர்வுக்கான வினாத்தாள் அல்ல. இது தொடர்பாக மேற்கண்ட பள்ளிக்குச் சென்று புகைப்படத்தை பரப்பிய ஆசிரியரிடம் விசாரணை நடத்தவிருக்கிறேன். அவர்தான் இந்தப் புகைப்படத்தைப் பரப்பினார் என்பதற்கான ஆதாரமும் கிடைத்திருக்கிறது. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அவர் பணியிடசி நீக்கம் செய்யப்படுவார்” எனக் கூறினார்.