Published:Updated:

`குழந்தை பிறப்பது எப்படி?' - மாணவிகளுக்கு ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது

கைது செய்யப்பட்ட ஆசிரியர் கிறிஸ்துதாஸ்

குறிப்பிட்ட ஆசிரியர் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் சொன்னதற்கு 'அவர் அப்படித்தான் தமாசாக பாடம் எடுப்பார்' என சாதாரணமாக சொல்லிவிட்டார்.

`குழந்தை பிறப்பது எப்படி?' - மாணவிகளுக்கு ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது

குறிப்பிட்ட ஆசிரியர் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் சொன்னதற்கு 'அவர் அப்படித்தான் தமாசாக பாடம் எடுப்பார்' என சாதாரணமாக சொல்லிவிட்டார்.

Published:Updated:
கைது செய்யப்பட்ட ஆசிரியர் கிறிஸ்துதாஸ்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியராக இருப்பவர் கிறிஸ்துதாஸ். இவர் வகுப்பில் பாடம் நடத்தும்போது இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பாடம் நடத்தியதாக இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர். மேலும், மாணவிகளின் பெற்றோர் இரணியல் அரசுப் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாது குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என கூறினர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், நேற்று நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் மாணவிகள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர்.

பெற்றோர் வாக்குவாதம்
பெற்றோர் வாக்குவாதம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறும்போது, "ஆசிரியர் கிறிஸ்துதாஸ் எப்போதும் இரட்டை அர்த்தத்தில்தான் வகுப்பு நடத்துவார். குழந்தை பிறப்பது எப்படி என்பது பற்றி பச்சையாக பாடம் எடுப்பார். அப்போது யாராவது முகம் சுழித்தால் 'நீங்க எல்லாம் அப்பிடித்தான் வந்தீங்க' எனச் சொல்லுவார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கைது செய்யப்பட்ட ஆசிரியர் கிறிஸ்துதாஸ்
கைது செய்யப்பட்ட ஆசிரியர் கிறிஸ்துதாஸ்

மாணவர்கள் யாராவது சட்டையை இன் பண்ணாமல் வந்தால் 'இன் பண்ணாம உள்ள என்ன வச்சிருக்கிற' என இரட்டை அர்த்தத்தில் பேசுவார். இது பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் சொன்னதற்கு 'அவர் அப்படித்தான் தமாசாக பாடம் எடுப்பார்' என சாதாரணமாக சொல்லிவிட்டார். அதனால்தான் எங்கள் பெற்றோர் பள்ளிக்கு வந்து நியாயம் கேட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் போலீஸிலும் புகார் அளித்தோம்" என்றனர் .