Published:Updated:

``கோவை கார் வெடிப்புச் சம்பவத்தை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகக் கையாண்டது; ஆனால்..." - ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

``நம் தேசத்தின் சிறப்பான காவல்துறைகளில் தமிழக காவல்துறையும் ஒன்று. ஆனால், இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதுதான் கேள்வி?" - ஆளுநர் ரவி

``கோவை கார் வெடிப்புச் சம்பவத்தை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகக் கையாண்டது; ஆனால்..." - ஆளுநர் ரவி

``நம் தேசத்தின் சிறப்பான காவல்துறைகளில் தமிழக காவல்துறையும் ஒன்று. ஆனால், இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதுதான் கேள்வி?" - ஆளுநர் ரவி

Published:Updated:
ஆளுநர் ரவி

கோவை நவக்கரை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது.  எந்தவித சமரசமும் இன்றி தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும். நமது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் மற்ற நாடுகள் நம்மீது பல்வேறு வகையில் தாக்குதல்களை நடத்துகின்றன. இதில் முக்கியமானது தீவிரவாதத் தாக்குதல். இதற்கு நாம் சரியான பதிலடிகளைக் கொடுத்துவருகிறோம்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளாக, எதிர்க் கொள்கை உடையவர்களாக எவ்வளவு விவாதம் செய்தாலும், தீவிரவாதத்துக்கு எதிரான ஒற்றைக் கருத்தில் நாம் இணைய வேண்டும். சில நாள்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டிருக்கிறது.

மிகப்பெரிய தாக்குதல்களை அவர்கள் திட்டமிருந்தனர். ஆனால் அது நடக்காமல் போனது. அதில் ஒரு குண்டு மட்டும் வெடித்திருக்கிறது. அவர்களின் இடத்திலிருந்து அதிக அளவிலான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது இது ஒரு மிகப்பெரிய சதி என்பதை உறுதி செய்கிறது.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தைத் தனிமைப்படுத்த வேண்டும். கோவை இது போன்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பெயர்போன இடமாக மாறிவருகிறது. தற்போது நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்னர் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.

இதை நாம் மேலோட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. நம் தேசத்தின் சிறப்பான காவல்துறைகளில் தமிழக காவல்துறையும் ஒன்று.

கோவை குண்டு வெடிப்பு
கோவை குண்டு வெடிப்பு

ஆனால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதுதான் கேள்வி. தீவிரவாதத் தாக்குதல்களை பொறுத்தவரை சம்பவம் நடந்த அடுத்தடுத்த நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால், நாம் நான்கு நாள்களுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு முகமைக்கு கொடுத்திருக்கிறோம்.

இது போன்ற வாய்ப்புகளை தீவிரவாதிகளுக்கு வழங்கக் கூடாது. இந்திய நாட்டுக்காக தீவிரவாதத்தின் மீது மென்மையான பார்வை வேண்டாம். தமிழக காவல்துறை சிறப்பாக நடவடிக்கை எடுத்தது. அதனால் நேரடியாக தேசிய பாதுகாப்பு முகமையைத் தொடர்புகொள்ள முடியாது. ஆனால் முடிவெடுக்கவேண்டியவர்கள் ஏன் தாமதம் செய்தனர்?

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

நான் முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, தமிழக காவல்துறை, பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஒரு தீவிரவாத அமைப்பு என எனக்குத் தகவல் அளித்தது. அந்த வகையில் தமிழக காவல்துறையினர் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்கள் என எனக்குத் தெரியும்” என்றார்.