Published:Updated:

`அவர் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கார்!’ - மூளைச்சாவால் மரணமடைந்த இளைஞர் குறித்து மருத்துவர்கள்

முருகேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள்

''முதலில் மறுத்தவர்கள் பின்னர், ‘உயிரோட இருக்கும்போதே அவன் எல்லாருக்கும் உதவி செய்யணும்னு ஆசைப்படுவான். இறந்த பின்னாடி அவனோட உறுப்புகள் இன்னொருத்தருக்கு பயன்படுதுனா நிச்சயமா அவன் சந்தோஷப்படுவான். அதனால உறுப்பு தானம் செய்றதுக்கு எங்களுக்கு சம்மதம்’ என்றார்கள்.''

`அவர் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கார்!’ - மூளைச்சாவால் மரணமடைந்த இளைஞர் குறித்து மருத்துவர்கள்

''முதலில் மறுத்தவர்கள் பின்னர், ‘உயிரோட இருக்கும்போதே அவன் எல்லாருக்கும் உதவி செய்யணும்னு ஆசைப்படுவான். இறந்த பின்னாடி அவனோட உறுப்புகள் இன்னொருத்தருக்கு பயன்படுதுனா நிச்சயமா அவன் சந்தோஷப்படுவான். அதனால உறுப்பு தானம் செய்றதுக்கு எங்களுக்கு சம்மதம்’ என்றார்கள்.''

Published:Updated:
முருகேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரைச் சேர்ந்தவர் முருகேசன் (27). இவர் தனக்குச் சொந்தமான டாடா ஏஸ் வாகனத்தை வாடகைக்கு ஓட்டி தொழில் செய்து வந்தார். மே 1-ம் தேதி அன்னவாசல் அருகிலுள்ள விளார்பட்டி பகுதியில் லோடு ஏற்றிச் சென்றபோது, டாடா ஏஸ் வேனின் முன் டயர் வெடித்திருக்கிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தின் மீது பயங்கரமாக மோதியதில் முருகேசன் படுகாயமடைந்தார். உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகேசனை அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்துள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் முருகேசனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஒரு கட்டத்தில், ‘தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கு. மேல் சிகிச்சைக்கு திருச்சிக்கு அழைச்சிட்டுப் போங்க’ எனக் கூறியுள்ளனர். அதையடுத்து அவரின் குடும்பத்தினர் எப்படியாவது முருகேசனை காப்பாற்றிவிட வேண்டுமென அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கும் மருத்துவர்கள் கைவிரிக்க, கடைசியில் மே 6-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் முருகேசனை அட்மிட் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தலையில் பலத்த காயமடைந்திருந்த முருகேசனின் நிலைமை மோசமாக இருந்தபோதிலும், மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் மே 8-ம் தேதி முருகேசனின் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் போனதோடு, அவர் மூளைச்சாவு அடைந்தார். முருகேசனின் நிலைகுறித்து அவரது குடும்பத்தாரிடம் எடுத்துச் சொன்ன மருத்துவர்கள், உறுப்பு தானம் குறித்து கோரிக்கை வைத்தனர். இதற்கு முருகேசனின் குடும்பத்தார் சம்மதம் தெரிவிக்க, 8-ம் தேதி இரவு ஆரம்பித்து மறுநாள் காலை 4 மணி வரை அறுவை சிகிச்சை செய்து, முருகேசனின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டிருக்கின்றன. இறுதியாக முருகேசனின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மருத்துவர்கள், முருகேசனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்திருக்கின்றனர்.

முருகேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள்
முருகேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள்

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம் பேசினோம். “ஜி.ஹெச்க்கு வரும்போதே மிகவும் மோசமான நிலையில் தான் முருகேசனுடைய உடல்நிலை இருந்தது. சி.டி ஸ்கேனில் அவருடைய மூளையில் கடும் ரத்தக்கசிவு இருப்பது தெரிந்தது. தீவிர சிகிச்சை கொடுத்தும் முருகேசன் உயிர் பிழைக்காமல் மூளைச்சாவு அடைந்தார். இந்த இக்கட்டான நிலை குறித்து அவரின் குடும்பத்தாரிடம் எடுத்துச் சொல்லியதோடு, உறுப்பு தானம் குறித்துப் பேசினோம். ‘யோசித்துச் சொல்றோம்...’ எனச் சொன்னவர்கள், பிறகு ‘வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார்கள். என்றாலும் பின்னர், ‘உயிரோட இருக்கும்போதே அவன் எல்லாருக்கும் உதவி செய்யணும்னு ஆசைப்படுவான். இறந்த பின்னாடி அவனோட உறுப்புகள் இன்னொருத்தருக்கு பயன்படுதுனா நிச்சயமா அவன் சந்தோஷப்படுவான். அதனால உறுப்பு தானம் செய்றதுக்கு எங்களுக்கு சம்மதம்’ என்றார்கள்.

அதையடுத்து மூளைச்சாவு அடைந்த முருகேசனின் உடலிலிருந்து இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கண்களை அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெற்றோம். ஒரு சீறுநீரகம் மற்றும் 2 கண்களை திருச்சி அரசு மருத்துவமனை நோயாளருக்கும், கல்லீரலை கோவைக்கும், மற்றொரு சிறுநீரகத்தை திருநெல்வேலிக்கும் அனுப்பி விட்டோம். இந்த உடல் உறுப்புகளால் 5 பேருக்கு வாழ்க்கை கிடைக்கும். மூளைச்சாவு அடைஞ்ச முருகேசனின் ஆன்மா நம்மை விட்டுப் போனால் கூட, 5 பேர் மூலமாக அவருடைய உறுப்புகள் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இந்த இக்கட்டான நிலையிலும் உறுப்பு தானம் கொடுக்க முன்வந்த அவரின் குடும்பத்தாரின் எண்ணம் மிகவும் பாராட்டத்தக்கது. இறந்தும் 5 பேர் உயிர் வாழ உதவிய முருகேசனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism