Published:Updated:

`இதனாலதான் பிள்ளைகளுக்கு கறி விருந்து வெச்சோம்!' - அசத்திய ஆசிரியைகள், ருசித்து மகிழ்ந்த மாணவர்கள்

கறி விருந்து

தூத்துக்குடியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் இணைந்து கிடாக்கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர். தங்களது சொந்தச் செலவில் செய்ததுடன், தாங்க்ளே பரிமாறி மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

`இதனாலதான் பிள்ளைகளுக்கு கறி விருந்து வெச்சோம்!' - அசத்திய ஆசிரியைகள், ருசித்து மகிழ்ந்த மாணவர்கள்

தூத்துக்குடியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் இணைந்து கிடாக்கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர். தங்களது சொந்தச் செலவில் செய்ததுடன், தாங்க்ளே பரிமாறி மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Published:Updated:
கறி விருந்து

தமிழகத்தில் சமீபகாலமாக ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும்போது மாணவர்கள் கேலி, கிண்டல்கள் செய்வதும், நடனமாடுவதும் நடந்து வருகிறது. ஆசிரியர்களை மதிக்காமல் தாக்க முற்படும் சம்பவங்களும் நடந்தன. மாணவர்களுக்கு இடையே முட்டல், மோதல் ஏற்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, இதுபோல விரும்பத்தகாத வகையில் நடக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

இறை வணக்கம்
இறை வணக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனையடுத்து பல பள்ளிகளில் கல்வியின் அவசியம் குறித்து மனநல மருத்துவர்கள், கல்வியாளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. தற்போது 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. சில நாள்களில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வுகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் இந்தப் பள்ளியில் 4 வகுப்பறைக் கட்டடங்கள் மிகவும் பழுதானதால் அவை இடித்து அகற்றப்பட்டன. பள்ளிக்கட்டடம் எழுப்பிட ஊர் மக்களே ரூ. 3 லட்சம் நிதி திரட்டி, தகரத்தால் ஆன தற்காலிக மூன்று வகுப்பறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்தப் பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 103 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். அரசு ஊதியம் பெறும் 6 ஆசிரியைகளும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாகத்தின் மூலம் 3 ஆசிரியைகளும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் இணைந்து தங்களது சொந்தச் செலவில் கிடாக்கறி விருந்து வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

உணவு பரிமாற்றம்
உணவு பரிமாற்றம்

இதுகுறித்து ஆசிரியைகளிடம் பேசினோம். “ஆசிரியையா பணியில சேர்ந்த நாள்ல இருந்து இப்போ வரைக்கும் எங்களிடம் படிக்கிற பிள்ளைகள்தான் எங்களோட உலகம். இங்க படிக்கிற பிள்ளைக அவங்க அம்மா, அப்பாகூட இருக்குற நேரத்தை விட, பள்ளிக்கூடத்துல எங்ககூட இருக்குற நேரம்தான் அதிகம். அதே மாதிரி நாங்களும் மாணவர்களோட இருக்குற நேரம்தான் அதிகம். வகுப்புல பாடங்களைக்கூட மனசுல பதியுற மாதிரி கதை, பாட்டுகள் மூலமாகத்தான் சொல்லிக்கொடுக்குறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவர்கள்கிட்ட அவங்களோட வயசுக்கு ஏத்தபடி இறங்கி வந்து பேசுறதுனாலயும், அதிக கண்டிப்பு இல்லாம கனிவு காட்டுறதுனாலயும் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் மட்டுமில்லாம, 8-ம் வகுப்பு வரைக்குமுள்ள மாணவர்களுக்கும் எங்க மேல அவங்களோட அம்மா, அப்பாவுக்கு இணையா பாசம் இயற்கையாவே வந்துடுது. காலையில ஸ்கூலுக்குள்ள நுழையும்போதே ‘குட் மார்னிங் டீச்சர்’னு எங்களுக்கு சிரிச்ச முகத்தோட வணக்கம் சொல்லி எங்ககூடயே கிளாஸ் ரூம் வரைக்கும் நடந்து வருவாங்க.

கறி விருந்து
கறி விருந்து

ஒரு நாள் லீவு போட்டாகூட, ‘ஏன் டீச்சர் நேத்து நீங்க பள்ளிகூடத்துக்கு வரல’ன்னு உரிமையா கேட்பாங்க. அவரவர் வீடுகள்ல ஏதாவது இனிப்பு செஞ்சாக்கூட ஆசையாக் கொண்டு வந்து டீச்சர்களுக்குக் கொடுக்குறதும், அதே நேரத்துல வீட்டுல நடந்த பிரச்னைகளைக்கூட ஒளிவுமறைவு இல்லாம சொல்லி அழுறதும்னு இருப்பாங்க. இந்தப் பள்ளியில படிக்கிற பிள்ளைகள் கிராமப்புறங்கள்ல இருந்து வர்றவங்கதான். கொரோனா தாக்குதல் காலகட்டத்திற்குப் பிறகு ரெண்டு வருஷத்துக்குப் பிறகு, கடந்த சில மாசங்களாத்தான் பள்ளிகள் தொடர்ந்து நடக்குது.

பள்ளிக்கூடத்துக்கு வராத அந்தக் காலகட்டத்துல மாணவர்கள் ஒருவிதமான உற்சாகமின்மைக்கு ஆளாகியிருந்தாங்க. திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு வந்த பிறகுதான் பழைய உற்சாகத்தை மாணவர்கள் முகத்துல பார்க்க முடியுது. வழக்கமான படிப்பினையும் இப்போதான் தொடங்கியிருக்காங்க. தற்போது தேர்வுகளும் தொடங்க இருக்கு. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையும் விடப்பட இருக்கு. இதனால, மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு கறி விருந்து வைக்க ஆசிரியைகள் எல்லோரும் பேசி முடிவெடுத்தோம்.

உணவு உண்ணும் மாணவர்கள்
உணவு உண்ணும் மாணவர்கள்

இதற்கான செலவை எங்களோட சம்பளத்துல இருந்து பகிர்ந்துக்கிட்டோம். வீட்டுப் பிள்ளைகளுக்குப் பரிமாறினதை விட இந்தப் பிள்ளைகளுக்கு சாப்பாடு பரிமாறினது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றனர். இந்த திடீர் கறி விருந்தினால் திக்குமுக்காடிப்போன மாணவர்கள், மகிழ்ச்சியுடன் சுவைத்து உண்டனர். ஊர் மக்களும் ஆசிரியைகளுக்கு பாரட்டுகளைக் கூறினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism