Published:Updated:

நீலகிரி: ஊரடங்கில் வீட்டில் இருக்கச்சொன்ன தாய்; கோபத்தில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

hormone and suicide
hormone and suicide ( Representational Image )

ஊரடங்கில் வெளியில் சுற்றாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு தாய் அறிவுறுத்தியதால்,விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் எரிக் ரெக்ஸ் தாம்சன். 23 வயதான இவர் தனது தாய் இமாகுலேட் ரெமிஜிஸ் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

எரிக் ரெக்ஸ் தாம்சன்
எரிக் ரெக்ஸ் தாம்சன்

ஆட்டோமொபைல் இன்ஜினீயர் படிப்பை முடித்துள்ள இவர், நாள்தோறும் நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போதைய கொரோனா ஊரடங்கிலும் நண்பர்களுடன் விளையாட வெளியில் சென்று வந்துள்ளார்.இதனால் கோபமடைந்த இளைஞரின் தாய் இமாகுலேட் ரெமிஜிஸ்," ஊரடங்கில் வெளியில் சுற்றாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இரு" என கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த எரிக் ரெக்ஸ் தாம்சன் வீட்டுக்குள்ளேயே விஷம் அருந்தித் தற்கொலை செய்துள்ளார்.

இந்த சோகம் குறித்து கதறி தாய் இமாகுலேட் ரெமிஜிஸ்,"ஒரு தனியார் பள்ளியில ஆசிரியையாக இருக்கேன்.கணவர் இறந்துட்டார்.ஒரு பொண்ணு ஒரு பையன்‌ மட்டும்தான்.பொண்ணுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது.டெய்லி வெளிய‌ போயி சுத்தாம கொஞ்ச நாள் வீட்டுல இருக்க சொல்லி கண்டிச்சேன்.அதுக்கு ரெண்டு நாளாக என்கூட பேசல. மதியம் சாப்பாடு கொடுக்கலாமுன்னு ரூமைத் திறந்து பார்த்தேன்,வாந்தி எடுத்து கிடந்தான்.பக்கத்துல இருக்கவுங்க உதவியோட ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனோம்.காப்பத்த முடியல" எனக் கண்ணீர் வடித்தார்.

Suicide Prevention (Representational Image)
Suicide Prevention (Representational Image)
Image by Daniel Reche from Pixabay

ஊரடங்கில் வெளியில் சுற்றாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு தாய் அறிவுறுத்தியதால்,விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு