Published:Updated:

நீர்நிலை, மரம் வளர்ப்பு; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு பசுமை விருதுகள்!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விருது

தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் சார்ந்து சிறப்பாகச் செயல்பட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது, ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

நீர்நிலை, மரம் வளர்ப்பு; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு பசுமை விருதுகள்!

தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் சார்ந்து சிறப்பாகச் செயல்பட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது, ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

Published:Updated:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விருது

``சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்மாதிரியாகச் செயல்படும் தனிநபர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்” என்று சட்டசபையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்திருந்தார்.

மெய்யநாதன்
மெய்யநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் சார்ந்து சிறப்பாகச் செயல்பட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு நேற்று பசுமை முதன்மையாளர் விருது, ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்பு இல்லாமல் போன நீர்நிலைகளை மீட்டு வரும் களப்பணிகளில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர் விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்த விருதை வழங்கினார்.

கோவை ஆட்சியரிடம் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.
கோவை ஆட்சியரிடம் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

இதுகுறித்து அந்த அமைப்பினர், ``எங்களுக்கு கைகொடுத்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி. நமது நீர்நிலைகளைப் காப்பாற்றவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். இதயத்தின் ஈரம் கொண்டு புவியின் ஈரம் காப்போம்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் மரங்களை நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க களப்பணியாற்றி வரும் வெற்றி அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் இந்த விருதை வழங்கினார். ``தமிழக அரசின் இந்த விருது எங்கள் அமைப்புக்கானது அல்ல.

திருப்பூர் ஆட்சியரிடம் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற வெற்றி அமைப்பினர்.
திருப்பூர் ஆட்சியரிடம் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற வெற்றி அமைப்பினர்.

தங்களின் காலி நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முன்வந்த வேளாண் மக்கள், வனத்துக்குள் திருப்பூர் மரக்கன்றுகள் வளர்ப்பை தங்களின் உரிமையாகத் தங்களின் பெருமையாகக் கருதும் திருப்பூர் மாவட்டத்தில் வாழும் அனைவருக்கும் உரித்தானது” என்று அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

அடுத்து, வேளாண் செய்திகளை வழங்கியவர்களில் பிரபலமானவர் ஞானசூரிய பகவான். 18 ஆண்டுகள் அகில இந்திய வானொலியில் பணியாற்றி அரசுக்கும், வேளாண்குடி மக்களுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். தற்போது இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அதன்மூலம் வேளாண் உற்பத்தி, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விவசாயிகளுக்குப் பயிற்சிக் கொடுத்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள தெக்குப்பட்டுக் கிராமத்தில், பூமி இயற்கை வளங்கள் பாதுகாப்பு மையத்தை நிறுவி, வேளாண்மைத் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் அவர்.

 ஞானசூரிய பகவான் விருது பெற்றபோது...
ஞானசூரிய பகவான் விருது பெற்றபோது...

அத்துடன், தடுப்பணைகள், சிறுவனங்கள், கசிவு நீர் குளங்கள், கிணற்று நீர் உறிஞ்சுக் குழிகள் அமைப்பது மற்றும் பருவகால மாற்றம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவரும் ஞானசூரிய பகவானின் சிறப்பான பணிகளைப் பாராட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் `பசுமை முதன்மையாளர்’ விருதை வழங்கி அவரைக் கௌரவித்திருக்கிறது. இது தொடர்பான நிகழ்ச்சி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஞானசூரிய பகவானுக்கு விருதை வழங்கினார். அதோடு, ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் முதல்முறையாக `பசுமை’ வகை ஆய்வும் இணைக்கப்பட்டுள்ளது. 22 உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் `பசுமை உற்பத்தியாளர் கூட்டமைப்புகளாக’ கண்டறியப்பட்டுள்ளன.

அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விருது வழங்கியபோது...
அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விருது வழங்கியபோது...

இந்தக் கூட்டமைப்புக்கு பசுமைவிருதுகளையும், 16 நிறுவனங்களுக்கு பசுமை விருது மற்றும் பசுமை உற்பத்திப் பொருள்கள் ஊக்குவிப்பு மானியமும் 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இதன்படி பசுமை உற்பத்திப் பொருள்கள் ஊக்குவிப்பு மானியத்தின் முதல் தவணை இரண்டரை லட்சத்துக்கான காசோலை மற்றும் பசுமை விருது திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது. மேலாண்மை இயக்குநர் சக்தி ஜோதி, துணை இயக்குநர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வனம் தன்னார்வ அமைப்பிற்கும், ஆசிரியர் அருள்ஜோதி என்பவருக்கும் பசுமை முதன்மையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. தலா ரூ.1லட்சம் பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண் தம்புராஜ் வழங்கி கௌரவித்தார்.

வனம் தன்னார்வ தொண்டு நிறுவனம்
வனம் தன்னார்வ தொண்டு நிறுவனம்

வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கலைமணியிடம் பேசியபோது, "தனியொரு நபரான என்னால் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது 95 பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் தன்னார்வலர்களாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 59 குறுங்காடுகளை அமைத்திருக்கிறோம.150 குறுங்காடுகள் அமைப்பதற்கு பல்வேறு அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறோம். 1லட்சத்து 42 ஆயிரம் பனைவிதைகளை டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விதைத்திருக்கிறோம். 2 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கும், சேவை அமைப்புகளுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கிறோம். எங்கள் சேவை தொடரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism