Published:Updated:

விபத்தில் மணமகன் மூளைச்சாவு; உடலுறுப்பு தானம் செய்து நெகிழச்செய்த குடும்பத்தினர்!

உடல் உறுப்பு தானம்

சிகிச்சை பலனின்றி, மூளைச்சாவு நிலை ஏற்பட்டது. பல வருடங்களுக்கு முன்பே ராஜி, தனது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க ஒப்புக் கொண்டிருந்தது உறவினர்களுக்குத் தெரிய வரவே, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

விபத்தில் மணமகன் மூளைச்சாவு; உடலுறுப்பு தானம் செய்து நெகிழச்செய்த குடும்பத்தினர்!

சிகிச்சை பலனின்றி, மூளைச்சாவு நிலை ஏற்பட்டது. பல வருடங்களுக்கு முன்பே ராஜி, தனது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க ஒப்புக் கொண்டிருந்தது உறவினர்களுக்குத் தெரிய வரவே, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

Published:Updated:
உடல் உறுப்பு தானம்

ஒவ்வொருவருக்கும் பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்பது இருந்தே ஆக வேண்டும் என்பது, இயற்கையின் நீதி! இதனால், மரணத்தை கண்டு கலங்குவது என்பது தேவையற்றது. ஆனாலும், வாழ்க்கையில் ஒரு சிலரின் மரணங்கள் நம்மை மிகவும் கலங்கவைத்து விடுகின்றன.

அத்தகைய நிகழ்வு தான், கடந்த 12-ம் தேதி திருப்போரூர் அருகே நிகழ்ந்துள்ளது. கண்ணகப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மரணம், உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமன்றி, அப்பகுதி மக்களையே பாதித்துள்ளது.

திருப்போரூர், கண்ணகப்பட்டு, அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜி. இவர், எலக்ட்ரீஷியன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ராஜி, ஓராண்டுக்கு முன்புதான், விபத்தில் தந்தையை பறி கொடுத்தார். இவருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் செப்டம்பர் 12-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ராஜி
ராஜி

கடந்த செப்டம்பர் 8 அன்று, திருமணப் பத்திரிகை கொடுப்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜி, கேளம்பாக்கம் வழியே, ஓ.எம்.ஆர். சாலையில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தார்.

முதலில், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜி, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி, மூளைச்சாவு நிலை ஏற்பட்டது.

பல வருடங்களுக்கு முன்பே ராஜி, தனது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க ஒப்புக் கொண்டிருந்தது உறவினர்களுக்கு தெரிய வரவே, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. திருமண கனவை நனவாக்கத் துடித்த கண்களும், தன் தாயின் அன்பை சுமந்த அந்த இதயமும், உடல் உறுப்புகளும் தானமாக தரப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமண வாழ்க்கையில் காலடி வைக்கவிருந்த ராஜி திடீரென மரமணமடைந்தது, அவரின் தாயை மிகவும் பாதித்துள்ளது. இதுகுறித்து 60 வயதாகும் அவர் அம்மா கலாவிடம் பேசியபோது, கண்ணீருடன் தன் துயரத்தை பகிர்ந்துகொண்டார். ``இந்த வீடு திருமணத்தால் விழாக்கோலம் பூண்டிருந்தது. தற்போது சந்தோஷமிழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது. எந்த தாய்க்கும் வரக்கூடாத நிலையில் நான் நிற்கிறேன்.

மாலையும் கழுத்துமாக அட்சதை தூவ வேண்டிய என் மகனுக்கு, இறுதி நிகழ்வாக பூவை அள்ளி தூவினேன். எனினும், இனி என் மகன் ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு சற்று ஆறுதலாக உள்ளது” என்று அழுதபடி அவர் கூறியது, அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.

களையிழந்து காணப்படும்  வீடு
களையிழந்து காணப்படும் வீடு

ராஜின் சகோதரியிடம் பேசியபோது, ``என் தம்பி மிகுந்த உதவும் குணமும், முற்போக்கு குணம் உள்ளவன். பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய உடலை மருத்துவ தானம் செய்திருந்தான். தாயை அரவணைத்து வந்த என் தம்பி இப்போது எங்களிடம் இல்லை” என்றார் பரிதவிப்புடன். திருமண வீடு களையிழந்த நிலையில், ராஜியின் மரணம் மணப்பெண்ணிற்கு தெரியாது; விபத்து என்று மட்டுமே தெரியும் என்று உறவினர்கள் கூறினர்.

மனிதன் இருக்கும் வரை ரத்ததானம், இறந்த பின் உடல் தானம் என்ற பொதுநலச் சிந்தனை உடைய ராஜின் செயல், அப்பகுதி மக்களை மட்டுமல்லாது அனைவருக்கும் நல்ல முன்னுதாரணம். இறந்தும் இன்று பலரை வாழவைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ராஜி!