Published:Updated:

90% தீக்காயம்... 8 நாள் போராட்டம்! - சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் குரூப் கேப்டன் வருண் சிங்!

வருண் சிங்
News
வருண் சிங்

இந்த 8 நாள்களில் பிளாஸ்டிக் சர்ஜரி உட்பட 7 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. செயற்கை சுவாச கருவிகள் மூலமே சுவாசித்து வந்தார்.

டிசம்பர் 8-ம் தேதி குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில் தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து நாட்டு மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 ராணுவ வீரர்கள் என ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரும் விபத்தில் சிக்கினர்‌. தளபதி பிபின் ராவத் அவர் மனைவி உட்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்து

குரூப் கேப்டன் வருண் சிங்கை கடுமையான தீக்காயங்களுடன் மீட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக கடந்த 9-ம் தேதி பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த வருண் சிங்குக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் வாக்கில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால், பலி எண்ணிக்கை 13-லிருந்து 14-ஆக உயர்ந்திருப்பதோடு, ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தற்போது உயிருடன் இல்லை என்பது வேதனையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வருண் சிங் குறித்து தெரிவித்த ராணுவ வட்டாரங்கள், ``ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் அனைவருமே கடுமையான தீக்காயங்களுடன் இறந்த நிலையில், வருண் சிங்கும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.

வருண் சிங்
வருண் சிங்

90 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயங்கள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. வருண் சிங் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சகோதரரும் கப்பல் படையில் பணியாற்றி வருகிறார். ராணுவ சேவையாற்றும் குடும்ப பின்புலத்தைச் சேர்ந்த வருண் சிங், குன்னூர் வெலிங்டனில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் பயிற்றுனராக இருந்து வந்தார்‌. இறுதி மரியாதை செலுத்த அவர் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. வருண் சிங்கிற்கு வீர வணக்கம்" என தெரிவித்தனர்.

உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் மற்றும் வீர வணக்கத்தை தெரிவித்து வருகின்றனர்.