Published:Updated:

GRT ஜூவல்லர்ஸ்: விழாக்கால சலுகை; புதிய துவக்கத்திற்கு வாழ்த்து

ஜி.ஆர்டி |GRT

GRT ஜூவல்லர்ஸ், 1964-ஆம் ஆண்டு முதல் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் இதர ராசி கற்க்களிலான GRT ஜூவல்லர்ஸின் ஆபரண கலெக்ஷன்களின் தூய்மை குறித்து வாடிக்கையாளர்கள் உறுதியான நம்பகத்தன்மையைகொண்டிருக்கின்றனர்.

GRT ஜூவல்லர்ஸ்: விழாக்கால சலுகை; புதிய துவக்கத்திற்கு வாழ்த்து

GRT ஜூவல்லர்ஸ், 1964-ஆம் ஆண்டு முதல் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் இதர ராசி கற்க்களிலான GRT ஜூவல்லர்ஸின் ஆபரண கலெக்ஷன்களின் தூய்மை குறித்து வாடிக்கையாளர்கள் உறுதியான நம்பகத்தன்மையைகொண்டிருக்கின்றனர்.

Published:Updated:
ஜி.ஆர்டி |GRT

GRT ஜூவல்லர்ஸ், பாரம்பரியமிக்க மற்றும் நவீன ஆபரணங்களை வடிவமைப்பதில் சிறந்து விளங்குகிறது. அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் இன்றைய வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்துள்ளது. 1964-ஆம் ஆண்டு முதல் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் இதர ராசி கற்க்களிலான GRT ஜூவல்லர்ஸின் ஆபரண கலெக்ஷன்களின் தூய்மை குறித்து வாடிக்கையாளர்கள் உறுதியான நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கின்றனர். GRT ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ஆபரண ரகங்கள் அனைத்துமே பிரத்தியேகமாகவும் திறன்மிக்க கைவினைஞர்களால் வடிவமைக்கப்படுகின்றன.

GRT ஜூவல்லர்ஸ்
GRT ஜூவல்லர்ஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றிலிருந்து உலக மக்கள் பல விஷயங்களை புரிந்துகொண்டுள்ளனர். இந்த சூழலானது நாம் தொலைதூரத்தில் இருந்தாலும் நெருக்கமாக இருக்கும் உணர்வு, நேரடியாக நாம் இணைந்து இருக்க இயலாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை போன்ற பலவற்றை அளித்துள்ளது. இதுவரை, பல தருணங்களையும் விழாக்களையும் நாம் தவறவிட்டுள்ளோம். இருப்பினும், அவை மீண்டும் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். இந்த ஆண்டு அனைவருமே மிகவும் வலுவாக, அதாவது, வியப்பூட்டும் விதத்தில் வலுவான உணர்வுகளுடனும் மிகுதியான ஆர்வத்துடனும் உள்ளனர். இது நம்மைச் சுற்றிலும் உள்ள கொண்டாட்டங்களுக்கு மங்களகரமான உணர்வை ஊட்டும் விதத்தில் அமைந்துள்ளது, தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜூவல்லரி பிராண்டுகளில் ஒன்றாகவும் பல குடும்பங்களின் மிகவும் நம்பிக்கை வாய்ந்த ஜூவல்லரி நிறுவனமாகவும் உள்ள GRT ஜூவல்லரஸ் அதன் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் அதன் வியப்பூட்டும் ஆபரணங்களுடனும் டிசைன்களுடன் பெரும்பங்கு வகிப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் மிக விரைவில் வரவிருக்கும் பொங்கல் திருநாள் என அனைத்து மகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டாட நாம் தயாராக இருக்கும் இந்நிலையில் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் இந்த பொன்னான விழாக்காலத்தை நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு GRT ஜூவல்லர்ஸ், "தங்க திருவிழாவின் மூலமாக பொன்னான சலுகைகளை வழங்கியுள்ளது வாடிக்கையாளர்கள் தங்க நகைகளின் சேதாரம் மீது (VA) 20% தள்ளுபடியும் வைரம் மற்றும் அன்கட் வைரங்களின் மதிப்பின் மீது (சாலிடெர்கள் தவிர) 25% வரை தள்ளுபடியும் வெள்ளி பொருட்களின் சேதாரத்தின் மீது (VA) 25% தள்ளுபடியும் வெள்ளி நகைகளின் MRP மீது 10% தள்ளுபடியும் மற்றும் பிளாட்டினம் மீது வியப்பூட்டும் சலுகைகளையும் பெறுவார்கள். அதுமட்டுமல்ல, வங்கிகள் வழங்கும் கேஷ்பேக் சலுகைகளும் இதற்கு சிறப்பை சேர்த்துள்ளது.

ஜி.ஆர்டி
ஜி.ஆர்டி

'தங்க திருவிழா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி GRT ஜூவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர் திரு.G.R. 'ஆனந்த் அனந்தபத்மநாபன் அவர்கள் பேசுகையில், இனி வரவிருக்கும் விழாக்காலத்தை ஒட்டி GRT ஜூவல்லர்ஸில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய தொகுப்பிலான வியப்பூட்டும் சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். 2 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு அனைவரும் ஒன்றுகூடும் இந்த தருணத்தில், GRT ஜூவல்லர்ஸில் சாதாரணமாக அவர்கள் வாங்குவதைவிட அதிகமாக நகைகளை வாங்கி தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் செல்வர் என நம்புகிறேன். இந்த புத்தாண்டு அனைவருக்கும் வளம் சேர்க்கும் ஆண்டாக அமைய எங்களது நல்வாழ்த்துக்கள்" என்றார்.

GRT ஜூவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர் திரு.G.R. ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து பேசுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல பிரிவுகளில் சிறப்பு வாய்ந்த புதிய தொகுப்பிலான ஆபரண டிசைன்களை அளிப்பதற்கு இந்த விழாக்காலம் ஓர் அற்புத வாய்ப்பினை எங்களுக்கு அளித்துள்ளது. தங்கத் திருவிழாவின் சிறப்பு சலுகைகளை எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெருவாரியாக பெற்று பலனடைவர் என்று நம்பிக்கை கொள்வதோடு அவர்கள் வளமான மற்றும் மங்களகரமான புதிய துவக்கங்களைக் கொண்டாடுவதற்கு எங்கள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.