Published:Updated:

2 நாள்களில் 3 மாடுகளைத் தாக்கிய புலி; 7 தானியங்கி கேமராக்களுடன் களமிறங்கிய வனத்துறை!

tiger attack
tiger attack

புலியைக் கண்காணிக்க வனத்துறையினர் தற்போது களமிறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக தேவன் கிராமத்தைச் சுற்றிலும் 7 இடங்களில் தானியங்கி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முதுகுழி பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கூடலூர் தேவர்சோலை அருகில் உள்ள தேவன் கிராமப்பகுதிக்கு வந்த புலி ஒன்று கடந்த 2 தினங்களில் 3 பசுமாடுகளைத் தாக்கியிருக்கிறது.

புலி தாக்குதலில் உயிரிழந்த நபர்
புலி தாக்குதலில் உயிரிழந்த நபர்

மேலும், மாலை வேளைகளில் தேயிலைத் தோட்டத்தில் புலியின் நடமாட்டம் இருப்பதையும் மக்கள் கண்டிருக்கின்றனர். இதையடுத்து இந்தப் பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையிடம் முறையிட்டு வந்தனர். இந்நிலையில், புலியைக் கண்காணிக்க வனத்துறையினர் தற்போது களமிறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக தேவன் கிராமத்தைச் சுற்றிலும் 7 இடங்களில் தானியங்கி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

புலி நடமாட்டம் குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் வனத்துறையினர், ``இதே பகுதியைச் சேர்ந்த நாராயணன், சுப்ரமணி ஆகியோரது பசுமாடுகளை புலி ஒன்று தாக்கிக் கொன்றது. தேயிலைத் தோட்டத்தில் உலவிய அந்தப் புலியின் வீடியோ சமூக வலைதளத்திலும் பரவியது.

tiger attack
tiger attack
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவரை தாக்கிய புலி; உயிரிழந்த சோகம்!

இதனால் மேலும் அச்சமடைந்துள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையில், 7 இடங்களில் தற்போது கேமராக்களைப் பொருத்தியுள்ளோம். கிராம மக்கள் யாரும் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகிறோம். புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவானால் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு