Published:Updated:

``மக்களை திசைதிருப்பவே கைது நடவடிக்கை!” - கொதிக்கும் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
News
ஹெச்.ராஜா ( விகடன் )

`தமிழகத்தில் மாற்றுக் கருத்தை நசுக்குகிற ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சி நடந்துவருகிறது. தமிழக அரசு இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' - ஹெச்.ராஜா.

பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எல்லாத் துறைகளிலும் தோற்றுவிட்டதால், திமுக-வுக்கு வாக்களித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மழை வெள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் தோற்ற அரசு, மக்களை திசைதிருப்பவதற்காகக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஹெச். ராஜா
ஹெச். ராஜா

அரசின் உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்களைக் கைதுசெய்துவருகிறது. திமுக ஆட்சியில் 150 இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பட்டா நிலத்தில் இருக்கக்கூடிய கோயில்களும் இடிக்கப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காஷ்மீர் போன்று தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் மாற்றுக் கருத்தை நசுக்குகிற ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சி நடந்துவருகிறது. தமிழக அரசு இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிபின் ராவத், மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசியவர்களின் ஆதாரங்களை வைத்திருக்கிறேன்.

மாரிதாஸ்
மாரிதாஸ்

அந்த தேச விரோதிகளைக் கைதுசெய்ய வேண்டும். காவல்துறை ஏவல்துறை என்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சரியாகச் சொல்லியிருக்கிறார். திமுக ஆட்சியில் எதிர்க் கருத்தைத் தெரிப்பவர்களான கல்யாணராமன், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் கைதுசெய்யப்படுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஜக-வினர் கூடினால் கொரோனா பரப்புவதாக வழக்கு பதியப்படுகிறது. முதலமைச்சர் கூடும் நிகழ்வுகளில் கொரோனா பரவுவது இல்லையா? மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே மாநிலத்தில் நடைபெறுகின்றன. திமுக அளித்த வாக்குறுதித் திட்டங்கள் ஒன்றையும் செயல்படுத்தவில்லை.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
விகடன்

நடராஜர் கோயிலில் வெளிநபர்கள் வரக் கூடாது என்று கூறுகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று, தேவாலயங்களுக்கு வெளிநபர்கள் வரக் கூடாது என்று சொல்லக்கூடிய முதுகெலும்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டா?" என்று கேள்வி எழுப்பினார்.