Published:Updated:

``ஒரே மாதத்தில் 4 பேர் பலி; மனித மலத்தைக் கையாளுதல் இயந்திரமயமாக்கப்பட வேண்டும்!" - அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ்

மனிதர்களின் வேலைகளை செய்யும் அளவுக்கு நவீன இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட போதிலும், சாபக்கேடாய் மலத்திலும், சாக்கடையிலும் கைகளைவைத்து சுத்தம் செய்துகொண்டிருப்பவர்களின் நிலையை என்னவென்று விவரிப்பது?

``ஒரே மாதத்தில் 4 பேர் பலி; மனித மலத்தைக் கையாளுதல் இயந்திரமயமாக்கப்பட வேண்டும்!" - அ.மார்க்ஸ்

மனிதர்களின் வேலைகளை செய்யும் அளவுக்கு நவீன இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட போதிலும், சாபக்கேடாய் மலத்திலும், சாக்கடையிலும் கைகளைவைத்து சுத்தம் செய்துகொண்டிருப்பவர்களின் நிலையை என்னவென்று விவரிப்பது?

Published:Updated:
அ.மார்க்ஸ்

இந்தியாவில், ``கழிவுநீர்த் தொட்டிகள், மலக்குழிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது! இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும்!" என சட்ட விதி இருந்தும், அது பெரும்பாலும் எங்கும் பின்பற்றப்படுவதில்லை. விளைவு... கழிவுநீர்த்தொட்டிகளிலும், மலக்குழிகளிலும் நேரடியாக இறங்கி சுத்தம் செய்யும் அப்பாவி மக்கள் விஷவாயு தாக்கி மாய்ந்து கொண்டிருப்பதை, அன்றாடம் செய்திகளின் ஊடாக பார்த்து ஓர் `உச்' கொட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

மனிதர்களின் வேலைகளை செய்யும் அளவுக்கு நவீன இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட போதிலும், சாபக்கேடாய் மலத்திலும், சாக்கடையிலும் கைகளைவைத்து சுத்தம் செய்துகொண்டிருப்பவர்களின் நிலையை என்னவென்று விவரிப்பது?

இயந்திரம்
இயந்திரம்

அண்மைக்காலமாக மலக்குழி மரணங்கள் சமூகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், `மலக்குழி மரணங்கள்' குறித்து கடந்த 18-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. பேராசிரியர் அ.மார்க்ஸ் (தேசிய அளவிலான மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு) தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ரமணி (சாதி ஒழிப்பு முன்னணி), ஸ்ரீராம் (சோசலிச தொழிலாளர் மையம்) மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலக்குழி மரணங்கள்
மலக்குழி மரணங்கள்

சோசலிச தொழிலாளர் மையத்தின் ஸ்ரீராம் பேசுகையில், ``கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்ய வேண்டும் என்று 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட Prohibition of Employment as manual Scavengers and Rehabilitation Act கூறுகிறது. நேரடியாகக் கையில் மலம் அல்லாமல் கருவிகள் கொண்டு மலம் அள்ளுவதற்கு எந்த தடையும் இந்தச் சட்டத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் கருவிகள் கொண்டு மலக்கழிவுகளை கையாண்டாலும் தொழிலாளிக்கு ஆபத்து ஏற்படுகிறது. நகரங்களில் இருக்கும் பெரும்பாலான சாக்கடைகளின் வடிவமைப்பு மனிதன் இறங்கிச் சுத்தப்படுத்தும் அமைப்பிலேயே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சாக்கடைகளுக்கு ஏற்றவாறு தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விடக் கூடுதல் வசதிகளுடன் தொழில்நுட்பம் உருவாக்குதல் வேண்டும். அதற்கு அரசின் முயற்சி முக்கியமானது. சென்னை போன்ற பெருநகரங்களில் மலக்குழியில் இறங்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், கான்டராக்ட் அடிப்படையிலும் வேலை செய்பவர்களாக இருப்பதால் அவர்களின் உயிருக்கு அரசும் பொறுப்பேற்பதில்லை, கான்ட்ராக்டர்களும் பொறுப்பேற்பதில்லை. இதனால் மலக்குழியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிர்க்கதியாக்கப்படுகின்றனர்" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசுகையில், ``கடந்த ஜீன் மாதம் 27-ம் தேதி மாதவரத்தில் தொழிலாளர்கள் நெல்சன் (26), ரவிக்குமார் (35) இருவரும் சாலையிலுள்ள சாக்கடை அடைப்பை நீக்கும்போது விஷவாயு தாக்கி இறந்துவிட்டனர். அதே மாதம் 29-ம் தேதி பெருங்குடியில் உள்ள நவீன குடியிருப்பு ஒன்றில் மலக்கழிவுத்தொட்டியில் (septic tank) இறங்கிய தட்சிணாமூர்த்தி, (34), பெரியசாமி (42) இருவரும் இறந்துவிட்டனர். ஒரே மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் நடந்த இறப்புகள் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இவர்கள் நால்வரும் பிற்படுத்தப்பட்ட சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். நவீனமயமான உலகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படவில்லை. நவீன இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகள் மாறவில்லை. உயிரிழப்புகளைத் தடுக்க மலத்தைக் கையாளுதல் பணி பாதுகாப்பான எந்திரமயமாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணியும் நஷ்ட ஈடும் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

மலக்குழிகளில் இறங்கி மலம் அள்ளுபவர்களும், நேரடியாக கைகளில் மலம் அள்ளுபவர்களும்தான் மலம் அள்ளுபவர்கள் என்று சட்டம் வரையறுக்கிறது. ஆனால் இந்தியாவில் கார்ப்பரேஷன்களில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் டயப்பர் உள்ளிட்ட சாலையோரத்தில் உள்ள மனிதக்கழிவுகளை தினசரி கையாள்கின்றனர். அவர்களையும் மலம் அள்ளுபவர்கள் என்று வரையறுத்து அதையும் தடை செய்து, ஏற்கெனவே உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.