Published:Updated:

`நீ நிச்சயம் வருவ தம்பி; நீ வந்தாதான் உண்மையான தீபாவளி'- சுர்ஜித்துக்காக உருகும் ஹர்பஜன் சிங்!

பலரும் சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள். 40 மணிநேரத்தையும் கடந்து மீட்பு பணி நடந்துவருகிறது. ரிக் இயந்திரம் மூலம் குழித் தோண்டும் பணி இன்னும் சில மணிநேரங்கள் ஆகும் என்பதால் மீட்பு பணியில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்றும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கவலை கொள்ள வைத்துள்ளது. பலரும் சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

`நீ நிச்சயம் வருவ தம்பி; நீ வந்தாதான் உண்மையான தீபாவளி'- சுர்ஜித்துக்காக உருகும் ஹர்பஜன் சிங்!

நடிகர் ரஜினிகாந்த் முதல் பல்வேறு நபர்களும் சுர்ஜித்துக்காக பிரார்த்திக்கும் நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இதுகுறித்து டுவிட் பதிவிட்டுள்ளார். ``நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்தை உயிர் பொழச்சு வரணும். உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.