Published:Updated:

ஈஷா வழக்கு: `விசாரணையை எதிர்கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடுவதா?' - உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் வேத பாடங்கள், குருகுல கல்வி முறையில் அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஈஷா மையத்துக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பியது.

கோவை, வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மைய நிர்வாகம் பள்ளிகளைத் தத்தெடுப்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான வழக்கில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், ஈஷா மையத்துக்கு புதிய நோட்டீஸ் அனுப்புமாறும், விசாரணை நடத்துமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது?

1992-ம் ஆண்டு முதல் ஜக்கி வாசுதேவால் உருவாக்கப்பட்ட ஈஷா அறக்கட்டளை நிர்வாகம் சார்பாக 9 பள்ளிகள் கிராமப்புறங்களில் நடத்தப்படுகின்றன. மேலும் பள்ளி தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் 31 அரசுப் பள்ளிகளை ஈஷா நிர்வாகம் தத்தெடுத்துள்ளது. பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் வேத பாடங்கள், குருகுல கல்விமுறையில் அளிக்கப்படுகின்றன. இது தொடர்பாக, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2005, பிரிவு 14 (1)-ன் கீழ் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தால் ஈஷா மையத்துக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக ஈஷா மையத்துக்குக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 2016-ம் ஆண்டு சம்மன் அனுப்பியது.

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்
பெண் பத்திரிகையாளர் கூட்டு பாலியல் வழக்கு: தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக்கிய மும்பை உயர்நீதிமன்றம்!

இந்த விசாரணை தொடர்பாக ஈஷா யோக மைய நிர்வாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தன் மனுவில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தங்களுக்கு அனுப்பிய நோட்டீஸை தொடர்ந்து அதற்கான ஆவணங்களுடன் தாங்கள் சென்றால், அந்த அமைப்பு முன்முடிவுடன் பிரச்னையை அணுகுவதாகவும், திறந்த அணுகுமுறையுடன் விசாரணையை நடத்துவதில்லை எனவும், எனவே சம்மனை ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியத்திற்கு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சி. ஜெய பிரகாஷ், விசாரணையை எப்போது வேண்டுமானாலும் நடத்த தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு உரிமை உண்டு என வாதிட்டார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், `அளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதை உறுதி செய்வதே குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கடமை. சம்மனை ரத்து செய்யக் கோரி விசாரணைக் கட்டத்திலேயே உயர்நீதிமன்றத்தை அணுகுவதை ஈஷா யோக மையம் செய்திருக்கக் கூடாது. மாறாக ஈஷா யோகா மைய நிர்வாகம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்து தனது வாதத்தை நிரூபிக்கலாம்' எனக் கூறியுள்ளது. மனுதாரரின் விசாரணையை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்துவதற்கான வாய்ப்பை ஆணையம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈஷா யோகா மையம்
ஈஷா யோகா மையம்
மேடம் ஷகிலா - 42: தனியார் பள்ளிகளில் தொடரும் பாலியல் சீண்டல்கள்... கல்வி வியாபாரமானதின் வெளிப்பாடா?

மேலும், `விசாரணைக்கு வரும்படி மனுதாரர் அமைப்புக்கு ஆணையம் நான்கு வாரத்துக்குள் மீண்டும் புதிய நோட்டீஸை அனுப்பவும், தேதி மற்றும் நேரத்தை நிர்ணயம் செய்யவும், மனுதாரர் தங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்கவும் வழிவகை செய்யப்படும். அனுப்பப்பட்ட நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து இரண்டு வாரத்துக்குள் மனுதாரரின் அமைப்பு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளின் உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய முடியாது' என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

- இ. நிவேதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு