Published:Updated:

கரிவலம்வந்தநல்லூர்: ஆரம்பச் சுகாதார நிலையம் குறித்த சர்ச்சை வீடியோ! - அதிகாரிகள் ஆய்வு

சர்ச்சை வீடியோ பதிவில் பேசியவர்

கரிவலம்வந்தநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கொடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த நபர் கோபத்துடன் பேசிய வீடியோ வைரலானதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கரிவலம்வந்தநல்லூர்: ஆரம்பச் சுகாதார நிலையம் குறித்த சர்ச்சை வீடியோ! - அதிகாரிகள் ஆய்வு

கரிவலம்வந்தநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கொடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த நபர் கோபத்துடன் பேசிய வீடியோ வைரலானதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

Published:Updated:
சர்ச்சை வீடியோ பதிவில் பேசியவர்

விருதுநகர் மாவட்டம், சோலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மகள் திருமணத்தையொட்டி மணமகள் வீட்டார் ஒரு வேனில் சங்கரன்கோவிலுக்கு வந்தபோது பருவக்குடி என்ற இடத்தில் வேனில் டயர் வெடித்துள்ளது. அதில் வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது ஆரம்பச் சுகாதார நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவியது.

விபத்தில் சிக்கிய வேன்
விபத்தில் சிக்கிய வேன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த விபத்தின்போது வேனில் பயணம்செய்த மணமகளின் தந்தை கண்ணன் உள்ளிட்ட 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு வசதிகள் இல்லாததால் சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரிவலம்வந்தநல்லூர் மருத்துவமனையில் போதிய வசதிகளும் ஊசி மருந்துகளும் இல்லாததால் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். அதில் பாதிக்கப்பட்ட ஒருவர், “நானும் தி.மு.க-காரன் தான்,. இந்த மருத்துவமனையில் ஊசி மருந்துகூட கிடையாது.. சென்னையில் மட்டும் அனைத்து வசதிகள் இருந்தால் போதுமா? கிராமங்களுக்கு எந்த வசதியும் கிடைக்காதா?” என கேள்வி எழுப்பினார். சுகாதாரத்துறை அமைச்சரையும் அவர் வாய்க்கு வந்தபடி பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வைரல் வீடியோவில் சர்ச்சை கருத்து
வைரல் வீடியோவில் சர்ச்சை கருத்து

அதையடுத்து, சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், போதிய மருந்து மாத்திரைகள் கையிருப்பு வைக்கவும் அறிவுறுத்தியிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.