Published:Updated:

`மகாராஷ்டிராவைவிட அதிக பரிசோதனை; செவிலியர்கள் பற்றாக்குறை இனி இல்லை!’ -விஜயபாஸ்கர் சொல்லும் நிலவரம்

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகராஷ்டிராவைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகம் செய்யப்படுகின்றன. கொரோனா சோதனை அதிகரிப்பதால் அதிக பாதிப்பு கண்டறியப்படுகிறது

தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன. சென்னையில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இருக்கிறதா... மருத்துவர்கள் செவிலியர்கள் என மருத்துவப் பணியாளர்களே கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் போதுமான மருத்துவப் பணியாளர்கள் இருக்கிறார்களா உள்ளிட்ட பல கேள்விகள் மாநில அரசை நோக்கி தினமும் கேட்கப்படுகிறது.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில் இன்று 2,000 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைய வழங்கிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவக் குழு அடங்கிய நடமாடும் வாகனங்களின் சேவையையும் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவப் பணியாளர்களுடன் 254 வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பணியில் உள்ளன’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``தற்போது நிலவும் நெருக்கடியான காலத்தில் ஆர்வத்துடன் பணிக்கு வந்துள்ள பணியாளர்களுக்கு பாராட்டுகள். சென்னையில் சிகிச்சை அளிக்க கூடுதல் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு பணி நியமன ஆணை பெற்ற 2,000 செவிலியர்கள் இன்று பணியில் சேருகின்றனர். இனிமேல் சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது” என்றார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும், ``சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படுகின்றனர். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்படுகின்றன. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகராஷ்டிராவைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகம் செய்யப்படுகின்றன. கொரோனா சோதனை அதிகரிப்பதால் அதிக பாதிப்பு கண்டறியப்படுகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு