Published:Updated:

கொரோனா: `ஓராண்டுக்கு முகக்கவசம் அவசியம்’ -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

 சுகாதாரத்துறை செயலாளர், அமைச்சர் ஆர்.பி
சுகாதாரத்துறை செயலாளர், அமைச்சர் ஆர்.பி

மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திலும் ஆய்வு செய்தார்.

இன்று காலை மதுரை வேளாண்மைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உடன், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கலெக்டர் வினய் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர். தொடர்ந்து, தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் 1,000 படுக்கை வசதி கொரோனா சிகிச்சைப் பிரிவை ஆய்வு செய்தனர். பின்னர், அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.

கிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது? #DoubtOfCommonMan
எய்ம்ஸ் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யும்  சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.பி
எய்ம்ஸ் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.பி
`5 கி.மீ சுற்றளவு; 10 அடி உயர சுற்றுச்சுவர்!' - வேகமெடுக்கும் மதுரை எய்ம்ஸ் ஆரம்பகட்டப் பணிகள்

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ``ஜூலை 3-ம் தேதி இந்திய அரசு வெளியிட்ட அரசாணையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்காக 224 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்துவருகிறது. கொரோனா தொற்று காரணமாக, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தாலும், தற்போது வருவாய்த்துறை மூலமாக, பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது” என்றார்.

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

கொரோனா காலகட்டமாக இருப்பதால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான நிதி கிடைப்பதில் சிக்கல் ஏதும் ஏற்படுமா எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எனத் தனியாக இயக்குநர் நியமிக்கப்பட்டு, மத்திய அரசு குழு அமைத்து வேலைகள் தொடங்கப்பட உள்ளது. ஜூலை 31-ம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தந்தைக் கையெழுத்திடுவதற்கான வேலைகள் தொடங்கப்படும். முதல்வரும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையப் பெற்றாலும் தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும்!” என்றார்.

தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராதாகிருஷ்ணன், ``ஓராண்டுக்கு முகக்கவசம் அவசியம். சமூக இடைவெளி அவசியம். மேலும், ரூ. 75 கோடியில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பைப் லைன் அமைக்கப்பட முதல்வர் சிறப்பு ஆணை வழங்கியுள்ளார். பெரும்பாலானோர் அறிகுறி இல்லாமல் உள்ளனர். இருந்தாலும் பெரும்பாலான படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாக மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு