Published:Updated:

`கொரோனா இறப்பு விகிதத்தை குறையுங்கள்!' - அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்

கொரோனா மரணம்
News
கொரோனா மரணம் ( ஃபைல் படம் )

தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்துமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் கோவிட்-19 எண்ணிக்கையை விரைவில் குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா தொற்றின் இறப்பு விகிதத்தை தவிர்க்க தமிழக அரசு, மாவட்ட அதிகாரிகளுக்கு மக்களிடையே விழிப்புணர்வையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை, முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``சமீபத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்று அதிகரிப்புக்கு ஒமிக்ரான் மற்றும் டெல்டா வேரியன்ட்தான் காரணம்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அனைத்து அத்தியாவசிய சுகாதார சேவைகளும் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ``தொற்றுநோயியல் நிபுணர்களின் அறிவுரைப்படி, நாம் அனைவரும் பொது சுகாதார நடைமுறைகளான தடுப்பூசி போடுதல் மற்றும் கோவிட் -19 பரவாமல் தடுக்க கூறப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இறப்பு விகிதத்தை முடிந்தவரை குறைக்க , மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்" என கூறியுள்ளார்.

அறிகுறி உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிப்பது போன்றவற்றில் சுகாதாரதுறை அதிகாரிகள் கவனமாகவும் யாரை சோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்கக்கூடாது என்பதில் ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ள வசதிகளை கவனிக்காமல் யாருக்கும் ஹோம் க்வாரன்ட்டீனை பரிந்துரைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 Vaccine
Vaccine
AP Photo / Mahesh Kumar A

மேலும், தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்துமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் கோவிட்-19 எண்ணிக்கையை விரைவில் குறைக்க முடியும் என கூறியுள்ளார்.