Published:Updated:

கொடநாடு வழக்கு: காரசார விவாதம் ; `எஸ்டேட் மானேஜரிடம் விசாரணை நடத்தப்படும்!’ - நடந்தது என்ன?

அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள்
அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள்

இந்த வழக்கை தேசமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியும் பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கும் பரபரப்புக்கும் மத்தியில் கொடநாடு வழக்கு விசாரணை ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடந்தது. முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கில் தற்போது கூடுதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் அடிப்படையிலேயே சயானிடம் கடந்த 17-ம் தேதி மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலத்தைக் காவல்துறையினர் பெற்றனர்.

சயான்
சயான்

தொடர்ந்து கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சயானின் ரகசிய வாக்குமூலம் இன்று நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சயான் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கின் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களான கனகராஜும் ஷாஜகானும் வருகை தந்திருந்தனர்.

காலை சரியாக 10:30 மணிக்கு தொடங்கிய வழக்கு வாதம், இரு தரப்பு வழக்கறிஞர்களிடையே கடுமையான விவாதமாக மாறி சலசலப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அமைதிப்படுத்திய நீதிபதி, ``இந்த வழக்கை தேசமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியும் பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. நீதிமன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டும்" எனக் கூறி இந்த வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஊட்டி - மாவட்ட நீதிமன்றம்
ஊட்டி - மாவட்ட நீதிமன்றம்

வாதம் முடிந்து வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள், ``இந்த வழக்கில் கூடுதல் விசாரணையைத் தொடர வேண்டும் என எங்கள் தரப்பில் கோரினோம். சாட்சிகளில் ஒருவரான கனகராஜின் நண்பர் அனுபவ் ரவி இந்த வழக்கில் கூடுதல் விசாரணை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதன் தீர்ப்பு வரும் வரை கூடுதல் விசாரணை நடத்த வேண்டாம் என அனுபவ் ரவி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

கொடநாடு மர்மங்கள்; இ.பி.எஸ்- க்கு எதிராக சசிகலா சாட்சியம்?! Elangovan Explains

அதற்கும் இந்த வழக்கு விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எங்கள் தரப்பில் வாதிட்டோம். அதன் அடிப்படையில் வரும் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடய அறிவியல் நிபுணர் ராஜகோபாலன், கோத்தகிரி மின்வாரியப் பொறியாளர் ஆகியோரிடம் வழக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்" என்றனர்.

தொடர் பரபரப்பு திருப்பங்களைக் கொண்ட இந்த வழக்கில் வரும் 2-ம் தேதிக்குப் பிறகு மேலும் சில முக்கியத் திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு