Published:Updated:

`ஊரடங்கில் தளர்வு; காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!’ - போக்குவரத்து நெரிசலால் திணறிய திருச்சி

திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
திருச்சியில் போக்குவரத்து நெரிசல்

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 41நாள்கள் ஆகின்றன. தமிழக அரசு செய்த சில தளர்வுகளால், பொதுமக்கள் ஜாலியாக வலம்வரத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாகத் திருச்சி திணறியது.

கொரோனா நோய் தொற்று முன் தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய அரசு கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், ஊரடங்கு மூன்றாவது முறையாக வரும் 17-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு - திருச்சி காவிரிப் பாலத்தில் உணவுக்காகக் காத்துக்கிடக்கும் மக்கள்!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 10 பேர்வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதாகத் திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாகத் தமிழக அரசு அறிவித்த சில தளர்வுகள் மட்டும் திருச்சியில் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. ஆனால், திருச்சியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே பொதுமக்கள் சர்வசாதாரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம்வரத் தொடங்கினர்.

திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
திருச்சியில் போக்குவரத்து நெரிசல்

இதனால் ஊரடங்கு அமலில் இருந்தும்கூட திருச்சி பாலக்கரை, காந்தி மார்க்கெட், மேலப்புதூர், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதனால் திருச்சியின் பல்வேறு பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. திருச்சி பாலக்கரை பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதனால் திருச்சியின் பல்வேறு பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. பெரிய மால்கள், ஜவுளிக் கடைகள் மூடிக்கிடக்கின்றன. திருச்சி பெரியக்கடை வீதி, பெரியகம்மாள தெரு உள்ளிட்டவற்றில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடிக்கிடக்கின்றன.

`ஊரடங்கு தளர்வை நீக்காவிட்டால் விபரீதமாகிவிடும்!'- புதுவை முதல்வருக்கு அலர்ட் கொடுத்த அமைச்சர்கள்

ஆனால், மற்ற இடங்களில் பாத்திரக்கடை, மளிகை, பெயின்ட் உள்ளிட்ட கடைகள் திறந்ததால் மக்கள் ஜாலியாக வலம்வரத்தொடங்கியுள்ளனர். இதனால் ஊரடங்கு உத்தரவு முற்றிலும் தளர்த்தப்பட்டது போலவே பொதுமக்கள் நடமாட்டம் திருச்சியில் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு