Published:Updated:

`டூ விலரில் விநாயகர் சிலைகள்; இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி!’-தீவிரக் கண்காணிப்பில் முத்துப்பேட்டை

டூ விலரில் கொண்டு செல்லப்படும் சிலைகள்
News
டூ விலரில் கொண்டு செல்லப்படும் சிலைகள்

`டூ வீலர்ல இரண்டு பேர் மட்டும்தான் கொண்டு போகணும். ஆசாத் நகர், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல் உள்ளிட்ட பகுதிகள் வழியாகத்தான் விநாயகர் சிலை கொண்டு செல்லப்படுது.’

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களில் விநாயர் சிலைவைத்து வழிபடுவதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தனியார் இடங்கள் மற்றும் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலையை இருவர் மட்டும் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் நடத்தப்படும் விநாயகர் பிரதிஷ்டை தமிழக அளவில் கவனம் ஈர்த்துவருகிறது. இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க-வினரின் ஏற்பாட்டில் இது நடத்தப்படுவது வழக்கம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் வழியாக இந்த ஊர்வலம் செல்வதால், சமூக விரோதிகளால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகாமலிருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் காரணமாக, ஊர்வலத்துக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தாலும்கூட, விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கக் கொண்டு செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையில் ஆறு டி.எஸ்.பி-க்கள் உட்பட நூற்றுக்கணக்கான போலீஸார் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான காவல்துறை வாகனங்களும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, ``இங்கே இருக்குற இந்து-முஸ்லிம்கள் ரொம்ப ஒற்றுமையாகத்தான் இருக்காங்க. ஒருத்தருக்கொருத்தர் அன்பா பழகிக்கிறாங்க. மோதல் உருவாக வாய்ப்பே இல்லை. ஆனாலும்கூட சில விஷமிகளாலும், சமூக விரோதிகளாலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாதுங்கற எச்சரிக்கையினால்தான் இந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டியதாயிருக்கு. கொரோனா ஊரடங்கால், இந்த ஆண்டு கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியிருக்கோம். விதிமுறைகள் பின்பற்றப்படுதான்னு தீவிரமாகக் கண்காணிக்கிறோம். வெவ்வேறு இடங்கள்ல இருந்து 19 சிலைகள் கொண்டு வரப்பட்டு, பாமினி ஆற்றில் கரைக்கப்படும். இந்தச் சிலைகள் ஒவ்வொண்ணையும் தனித்தனியாகக் கொண்டுவரத்தான் அனுமதி வழங்கியிருக்கோம்.

டூவீலரில் கொண்டு செல்லப்படும் சிலைகள்
டூவீலரில் கொண்டு செல்லப்படும் சிலைகள்

டூ வீலர்ல இரண்டு பேர் மட்டும்தான் கொண்டு போகணும். ஆசாத் நகர், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல் உள்ளிட்ட பகுதிகள் வழியாகத்தான் விநாயகர் சிலை கொண்டு செல்லப்படுது. இதெல்லாம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள். நிறைய தர்காவும் இருக்கு. இந்தப் பகுதிகள்ல பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செஞ்சிருக்கோம்” என்றனர் போலீஸார்.