Published:Updated:

``நாளை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!" - வானிலை ஆய்வு மையம் தகவல்

8 மாவட்டங்களுக்குக் கனமழை

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

``நாளை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!" - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Published:Updated:
8 மாவட்டங்களுக்குக் கனமழை

இலங்கையை ஒட்டியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. வரும் நவம்பர் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேகமான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை
கனமழை

தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாளை புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 6-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை
கனமழை

நவம்பர் 7-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.