Published:Updated:

ஊட்டி: கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சாலைகள்... பாதிப்புக்குள்ளான வாகன ஓட்டிகள்!

ஊட்டி

தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஊட்டி நகரின் சில இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஊட்டி: கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சாலைகள்... பாதிப்புக்குள்ளான வாகன ஓட்டிகள்!

தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஊட்டி நகரின் சில இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Published:Updated:
ஊட்டி

நீலகிரியில் கடந்த வாரம் தீவிரமடைந்த தென்மேற்குப் பருவமழையால் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாமல் பெய்த மழையால் வறண்டுகிடந்த அணைகள் அனைத்தும் ஒரே வாரத்தில் நிரம்பின. பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. மரங்கள் சாலைகளில் பெயர்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சீரமைப்புப் பணிகளில் மீட்புக்குழுவினர் உடனுக்குடன் ஈடுபட்டுவந்தனர்.

ஊட்டி
ஊட்டி

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மழை சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், நேற்று மதியம் முதல் ஊட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தீவிரமடைந்திருக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஊட்டி நகரின் சில இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. இதேபோல், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் ராட்சத மரம் ஒன்று மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் சேதமடைந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து நம்மிடம் பேசிய வாகன ஓட்டிகள், ``ஊட்டி போட்‌ ஹவுஸ் சாலை, பூங்கா சாலை, சேரிங்கிராஸ் போன்ற பகுதிகளில் கால்வாய் நீர் சாலைகளில் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் வாகனங்களை இயக்க முடிவதில்லை. அவசரத் தேவைகளுக்கு சாகசப் பயணம் செய்து கடக்கவேண்டியிருக்கிறது. இவற்றைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ஊட்டி
ஊட்டி

மழையின் தீவிரம் குறித்து ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ``முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறோம். மழை பாதிப்புகள் குறித்து மக்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகச் சீர்செய்துவருகிறோம். தீவிர மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கிறோம்" என்றனர் அதிகாரிகள்.