Published:Updated:

`வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி’ -கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுமுறை!

இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மழை!
மழை!

தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாள்களாக கொஞ்சம் இடைவெளிவிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை இருக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ``இலங்கைப் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றாழுத்த தாழ்வுப் பகுதியானது, நகர்ந்து குமரிக் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதுவே பின்னர், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையும்” எனக் கூறியுள்ளது.

`மனசாட்சியை  தொட்டுப்பார்த்தால் இப்படி பேசியிருக்கமாட்டார்!’ -சுஜித் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

இந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழையும் வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று பெய்த மழை காரணமாக, சிவகங்கை, நெல்லை, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் கொடைக்கானல் மலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை
மழை

விருதுநகர், மதுரை, ராமநாதபுரம். தேனி ஆகி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனினும் சென்னை, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.