Published:Updated:

Live: `கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்... மேயர் பிரியா ஆய்வு!

மேயர் ஆய்வு
Live Update
மேயர் ஆய்வு

பருவமழை தொடர்பான செய்திகளின் அப்டேட்ஸ்..!

01 Nov 2022 1 PM

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மாநகர மேயர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

01 Nov 2022 1 PM

`கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்’

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், ``திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 13 செ.மீ, பெரம்பலூரில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களில் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தமிழக கடற்கரை பகுதிகளான மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், அடுத்த இரண்டு தினங்களுக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தி பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1-ம் தேதி பதிவான மழை பொறுத்தவரை கடந்த 72 ஆண்டுகளில் 3 வது முறையாக அதிகபடியான மழை பதிவாகியிருக்கிறது." என்றார்

01 Nov 2022 10 AM

திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை

01 Nov 2022 9 AM

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்துவருகிறது.

கனமழை
கனமழை

அதேபோல சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கனமழை எச்சரிக்கையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

01 Nov 2022 9 AM
மழை
மழை

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்திருக்கிறது.