Published:Updated:

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு! - புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

பாலசுப்பிரமணியன்
News
பாலசுப்பிரமணியன்

பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த விபத்துக்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் சித்திரித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் என்பவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

பாலசுப்பிரமணியன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், 1975-ல் ரஷ்யாவிலயிருந்து வாங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட விமானம், மிகவும் பாதுகாப்பான விமானம் எப்படி விபத்துக்குள்ளானது? இதில் பெரிய சதித்திட்டமே இருக்க வாய்ப்பிருக்கிறது. இதில், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சருக்கும் தொடர்பு இருப்பதுபோல் பேசியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு! - புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

இந்த நிலையில் தான், புதுக்கோட்டைப் பிறமொழி தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் என்பவர் இது பற்றி கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "எதிர்பாராமல் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படைகளின் தளபதி, மனைவி அவருடன் பயணித்த சக வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

தேசமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள இந்தச் சூழலில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த விபத்துக்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் சித்திரித்து வீடியோ பதிவு செய்து யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி கீரனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியனைக் கைதுசெய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz