Published:Updated:

திருச்சி: பலூனுக்கான ஹீலியம் சிலிண்டர்; திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி - நடந்தது என்ன?

திருச்சி | சம்பவ இடம்

ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: பலூனுக்கான ஹீலியம் சிலிண்டர்; திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி - நடந்தது என்ன?

ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருச்சி | சம்பவ இடம்

தொடர் விடுமுறையை ஒட்டி திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலப்புலிவார்டு சாலை நேற்று பரபரப்பாக இருந்தது. தனியார் துணிக்கடைகள் வாசலில் சிறு சிறு பொம்மைக் கடைகள் மற்றும் பலூன் வியாபாரிகள் பரபரப்பாக விற்பனை நடத்தி வந்தனர். இப்படியும் ஒரு பெரும் விபத்து நடக்கும் என அங்கிருந்தவர்கள் யாரும் அதுவரை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். துணிக்கடை வாசலில் பரபரப்பாக பலூன் விற்பனை செய்து வந்த வட மாநில இளைஞரிடமிருந்து 'டமார்'ன ஒரு பெரும் வெடிச் சத்தம். ஒரு கணப்பொழுதிற்குள் அந்த இடத்திலிருந்தவர்கள் அலறியபடி அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.

துணிக்கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. அங்கிருந்த ஆட்டோ ஒன்று உடைந்து நொறுங்கியது. இருசக்கர வாகனங்கள் சிலவும் சேதமடைந்தன. வெடிச் சம்பவத்தால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தார். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அலறியபடி நின்றிருந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விசாரணையில் இறங்கினர். முதலில் ஆட்டோவில் இருந்த சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஆட்டோ சிலிண்டர் வெடித்திருந்தால் தீப்பற்றியிருக்கும். எனவே, அது காரணமில்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு தான் பலூன்களுக்காக வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்ததே விபத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது.

பலூன் விற்பனை செய்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனார் ரவி என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், அவர் அனுமதியில்லாமல் ஹீலியம் சிலிண்டரை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அனார் ரவி உயிர் தப்பியிருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்கிற மாட்டு ரவி என தெரியவந்துள்ளது. மாட்டு ரவி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் ஒரு ரெளடி என்றும் சொல்கின்றனர்.

மேலும், இந்த விபத்தில் 15 பேர் லேசாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜீவானந்தம் என்கிற 13 வயது சிறுவன் அதிகமான காயத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.