Published:Updated:

பொம்மலாட்ட வீடியோ மூலம் மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு; அரசுப்பள்ளி ஆசிரியையின் புது முயற்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியை.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியை.

பொம்மலாட்டம் வீடியோ மூலம் பெண் பிள்ளைகளுக்குப் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஹேமலதா. கொரோனா பெறுந்தொற்றுக் காலத்தில், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த நேரத்தில், தமிழ் பாடங்களை இயங்குபடக் காணொளியாக (அனிமேஷன்) மாற்றி பென்-டிரைவ் மூலம் மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, இக்கட்டான சமயத்தில் கற்றல் முறையை எளிமைப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டவர்.

அரசுப்பள்ளி ஆசிரியை ஹேமலதா
அரசுப்பள்ளி ஆசிரியை ஹேமலதா

அவருடைய சமூக நேசம், சேவை மற்றும் ஆசிரியர் பணியைப் பாராட்டி `கல்வித் தாரகை' விருது வழங்கி பெருமை கொண்டது அவள் விகடன். தொடர்ந்து, கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் வீட்டுக்குள் இருக்காமல் வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அரசுப் பள்ளி ஆசிரியர் பெருமாள் என்பவருடன் இணைந்து தெருக்கூத்து கலைஞர் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார். தற்போது, மாணவிகளுக்கு சிறார் வதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கருத்துகள் மாணவிகளிடம் எளிதில் சென்று சேர, பொம்மலாட்டத்தைப் பயன்படுத்தி வீடியோவை வடிவமைத்துள்ளார். இந்தச் சமூகப் பணியை செ.குன்னத்தூர் பகுதியிலிருந்து தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஆசிரியை ஹேமலதாவிடம் பேசினோம். ``குழந்தைகள் சிறார் வதைக்கு உள்ளாவதைத் தடுக்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தோன்றியது. அதனால் காட்டாங்கொளத்தூரில் உள்ள பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் என்பவர் மூலம் பொம்மலாட்டம் மூலம் குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வடிவமைத்துள்ளேன். இதற்கு 20,000 ரூபாய் வரை செலவானது. பள்ளி தொடங்கியதும் இதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என இருந்தேன். ஆனால், கடந்த வாரம் செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் சிறார் வதைக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. அந்தச் சம்பவம் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

தெருக்கூத்து கலைஞர்கள் வேடத்தில் கொரோனா விழிப்புணர்வு
தெருக்கூத்து கலைஞர்கள் வேடத்தில் கொரோனா விழிப்புணர்வு
``சேவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது!'' - மோடி பாராட்டிய அரசுப்பள்ளி ஆசிரியை ஹேமலதா

எனவே, கடந்த திங்கள்கிழமையன்று, வடிவமைத்து வைத்திருந்த குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு வீடியோவுடன் செ.குன்னத்தூர் பகுதிக்குச் சென்றேன். அங்கிருக்கும் சிறுமிகளை அழைத்து, மரத்தடி மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் அமரவைத்து அந்த வீடியோவைப் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். நல்ல தொடுதல் (குட் டச்) மற்றும் மோசமான தொடுதல் (பேட் டச்) என்றால் என்ன என்றும், பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றோ, பிற காரணங்கள் கூறியோ யாராவது கூப்பிட்டால் தனியாகப் போகக் கூடாது என்றும், தவறாக யாராவது தொட்டால், NO... GO... TELL.. எனும் வார்த்தைகளை ஞாபகம் வைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கிக் கூறினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யாராவது தவறான எண்ணத்துடன் தொடும்போது, குழந்தைகள் பயப்படாமல் NO என்று சொல்ல வேண்டும். அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு ஓட வேண்டும் (GO). நமது நலன் மீது அக்கறை கொண்ட மற்றும் நம்பிக்கையான நபர்களிடம் இது குறித்துச் சொல்ல வேண்டும் (TELL) என்பதுதான் அந்த மூன்று வார்த்தை. அப்படிப்பட்ட சீண்டல்களுக்கு குழந்தைகள் உள்ளாக்கப்பட்டால், 1098 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். இது போன்ற புகார்களுக்கு சாதாரண உடையில்தான் காவல்துறை பெண் அதிகாரிகள் வருவார்கள். அதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்த 12 நிமிட வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

விழிப்புணர்வு வீடியோ
விழிப்புணர்வு வீடியோ
ஏசி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை; தனியார் பள்ளிகளிலிருந்து வந்து குவியும் அட்மிஷன்; அசத்தும் அரசுப்பள்ளி!

அன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்து கொண்டார்கள். பொம்மலாட்டம் மூலம் அந்த விழிப்புணர்வு வீடியோ இருந்ததால் ஆர்வத்துடன் கவனித்தார்கள். காவல்துறையினர் நமது நலன் விரும்பி என்று உணர்ந்து கொண்டார்கள். இதுகுறித்து மகளிர் காவல் நிலைய அதிகாரியிடம் பேசியுள்ளேன். மற்ற ஊர்களுக்கும் சென்று பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று இருக்கிறேன்" என்றார்.

டீச்சருக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு