Published:Updated:

தமிழ் வளர்த்த ஆங்கிலேயர் எல்லீசனுக்கு ராமநாதபுரத்தில் மணிமண்டபம்; பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை உயர் நீதிமன்றம்

தமிழ் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை மற்றும் மதுரையில் சில பகுதிகளுக்கு ’எல்லீஸ் நகர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் அவருடைய கல்லறை பராமரிப்பில்லாமல் உள்ளது. அதை சரிசெய்து அங்கு ஸ்தூபியும் மணிமண்டபமும் அமைக்க வேண்டும்

திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த ஆங்கிலேய அதிகாரி எல்லீசனுக்கு, இராமநாதபுரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்குமாறு , தமிழக அரசு செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

திருக்குறள்
திருக்குறள்
Feswa

ராமநாதபுரம் மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ``1810-ல் சென்னை கலெக்டராக இருந்தவர் பிரான்சீஸ் ஒயிட் எல்லீஸ். இவர் நீதிபதியாகவும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகளில் உயர் பொறுப்புகளையும் வகித்தவர். தமிழ் மீதான பற்றினால் தன் பெயரை `எல்லீசன்’ என மாற்றிக்கொண்டார்.

பின்பு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். திருவள்ளுவரின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார். ஓலைச்சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார். இவருடைய காலம் தமிழ் மறுமலர்ச்சிக்கான காலமாக இருந்தது. பின்பு தமிழ் ஆய்வுப்பணிகளுக்காக 1818-ல் தென் மாவட்டங்களுக்கு வந்தார்.

திருமுருகன்
திருமுருகன்

ராமநாதபுரத்தில் வசித்தபோது உடல்நலம் பாதித்து இறந்தார். இவருடைய கல்லறை ராமநாதபுரம் வடக்குத்தெரு தேவாலய வளாகத்தில் உள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை மற்றும் மதுரையில் சில பகுதிகளுக்கு `எல்லீஸ் நகர்’ எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் அவருடைய கல்லறை பராமரிப்பில்லாமல் உள்ளது. அதை சரிசெய்து அங்கு ஸ்தூபியும் மணிமண்டபமும் அமைக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல்துறை முதன்மைச்செயலாளர்கள், ராமநாதபுரம் கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.