Published:Updated:

இந்தியாவின் முதல் அறைகலன் பூங்கா, சோலார் மின்சக்தி திட்டம்; ஸ்டாலினின் தூத்துக்குடி விசிட் ஹைலைட்ஸ்!

முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி ஸ்பிக் தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் மற்றும் இந்தியாவிலேயே தூத்துக்குடியில் அமையவுள்ள முதல் அறைகலன் பூங்காவிற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்தியாவின் முதல் அறைகலன் பூங்கா, சோலார் மின்சக்தி திட்டம்; ஸ்டாலினின் தூத்துக்குடி விசிட் ஹைலைட்ஸ்!

தூத்துக்குடி ஸ்பிக் தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் மற்றும் இந்தியாவிலேயே தூத்துக்குடியில் அமையவுள்ள முதல் அறைகலன் பூங்காவிற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஸ்பிக் தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக 75 ஏக்கர் பரப்பளவில் ரூ.150.40 கோடி செலவில், ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை தங்களது தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இது நவீன கால பசுமை, நிலையான தொழில்நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியைச் செயல்படுத்த ஸ்பிக் நிறுவனத்தின் இ.எஸ்.ஜி உத்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் சோலார் மின்சக்தி திட்டம்
மிதக்கும் சோலார் மின்சக்தி திட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மிதக்கும் சோலார் திட்டங்கள், பாரம்பர்ய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளைவிட, அதிக உற்பத்தியை வழங்குவதோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி தண்ணீரை ஆவியாக்காமல் 60 சதவிகிதம் சேமிக்கிறது. அனைத்து மின்சாரமும் ஸ்பிக் மற்றும் `க்ரீன்ஸ்டார்’ உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மிதக்கும் சூரியமின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,156 ஏக்கர் பரப்பளவில், இந்தியாவிலேயே முதல்முறையாக அமையவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.4,488 கோடி மதிப்பில் 14 நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்தன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தூத்துக்குடியில் இந்த சர்வதேச் அறைகலன் பூங்காவினைத் துவக்கிட முக்கியக் காரணமே கடல்வழிப் போக்குவரத்துதான்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்திலுள்ள துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இரண்டாம் இடத்திலும், சர்வதேச துறைமுகங்களில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்.

சீனா, மலேசியா, ஜெர்மனி,இத்தாலி, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து மரங்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுவதால், 70 முதல் 88% மூலப்பொருள் தேவையைப் பூர்த்தி செய்திட முடியும்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக 4 முதல் 5 ஆண்டுகளில் முழுமையாகச் செயல்படும் தருணத்தில் ரூ.1,500 முதல் 1,800 கோடி அளவிற்கான முதலீடுகள் மற்றும் 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினையும் வழங்கிட முடியும்.

இதனால், ரூ.56,629 கோடியில் 1,74,999 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம், `நம்பர் ஒன்’ என்ற இடத்தை விரைவில் அடையும். இதுவரை மூன்று முதலீட்டாளர் மாநாடு நடத்தி உள்ளோம்” என்றார்.

தீக்குளிக்க முயன்றவர்
தீக்குளிக்க முயன்றவர்

இதனைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையால் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

வடிகால் அமைக்கும் பணி ஆய்வு
வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

இதனையடுத்து அப்பகுதியில் நடந்து வரும் கட்டுமானப் பணிகள், சாலைகள் சீரமைக்கும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இதில், பிரையண்ட் நகர் பகுதியில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் வந்தபோது செக்காரக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுடலைமணி, சொத்துப் பிரச்னை காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீஸார், உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.