Published:Updated:

தொடர்ந்து பெய்யும் வடகிழக்கு பருவமழை!- 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

விடுமுறையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மற்றும் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மழை
மழை

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை என பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்துவருகிறது. மழையால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இரவு முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

மழை
மழை

இதற்கிடையே, தமிழகத்தின் பல பகுதிகளில் நாளையும் கனமழை பெய்யும் என்று கூறி தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மற்றும் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மழை
மழை

மழை நிலவரங்கள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ``நாளை ஓரளவுதான் மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சென்னையில் தயாராக உள்ளனர். வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை. டலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.