நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் 55 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த தாவரவியல் பூங்காவில் உள்நாடு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாவர வகைகளை பராமரித்து வருகின்றனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது மட்டுமல்லாது, கள்ளி, பெரணி தாவர வகைகளைப் பாதுகாக்கும் பொருட்டு பிரத்யேக கண்ணாடி மாளிகளைகளில் வைத்து பராமரித்து வருகின்றனர். அடுத்த முயற்சியாக மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் ஆர்க்கிட் தாவர வகைகளை கண்ணாடி மாளிகையில் பாதுகாத்துப் பராமரிக்கும் திட்டத்தில் பூங்கா நிர்வாகம் முனைப்புக் காட்டி வருகிறது.
ஆர்க்கிட் கண்ணாடி மாளிகை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சமயமூர்த்தி, ``தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள், பெரணிகள், கள்ளிகள் உள்ளன.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஆர்க்கிட் தாவர வகைகளைச் சேகரித்து, சிறப்பு கண்ணாடி மாளிகையில் வைத்து பராமரிக்கப்படும். இது குறித்து அரசு தாவரவியல் பூங்கா அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. விரைவில் ஆர்க்கிட் மலர்களைக் கொண்ட கண்ணாடி மாளிகை ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்படும்" என்றார்.