Published:Updated:

‘வீடுகளில் வேப்பிலை கட்டி மஞ்சள் நீர் தெளிப்பு!’ -கொரோனாவைத் தடுக்க களமிறங்கிய இல்லத்தரசிகள்

குடியாத்தம்
குடியாத்தம்

வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டி வாசலில் மஞ்சள் நீரைத் தெளித்து தங்களின் குடும்பத்தைத் தற்காத்துக்கொள்கிறார்கள் இல்லத்தரசிகள்.

‘கொரோனா’ பெருந்தொற்றைட் தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழகத்தில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவை மாநில அரசு அமல்படுத்திய நிலையில், அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

வேலூர்
வேலூர்

தடை உத்தரவு அமலுக்கு வந்த பிறகும், பொதுமக்கள் வெளியில் சுற்றித் திரிகிறார்கள். அவசரம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காக வெளியில் வரும் நபர்கள் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இல்லத்தரசிகளும் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள். குடும்பத் தலைவரும் குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியில் கால்களை எடுத்து வைக்க அனுமதிக்கவில்லை. வெளியில் செல்லும் ஆண்களிடம் கொரோனா நோயைக் கொள்முதல் செய்யப் போகிறீர்களா? என்று எச்சரிக்கிறார்கள் வீட்டுப் பெண்கள்.

வேலூர்
வேலூர்

இதைச் சுட்டிக் காட்டும் விதமாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘‘ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள்தான். ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்குத்தான் உண்டு. அவர்கள் தங்களின் கடமையை நிறைவேற்றி வீட்டையும் நாட்டையும் காக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டியும், வாசலில் மஞ்சள் நீர் தெளித்தும் கொரோனாவை அண்டவிடாமல் குடும்பத்தினரைப் பாதுகாத்துவருகிறார்கள். மேலும், வீடுகளைச் சுற்றி ப்ளீச்சிங் நீரைத் தெளித்து சுகாதாரப் பணியினை மேற்கொள்கிறார்கள்.

குடியாத்தம்
குடியாத்தம்

குறிப்பாக குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் டேங்கர் லாரியில் தண்ணீரை நிரப்பி மஞ்சள், உப்பு மற்றும் மாட்டுச் சாணம், வேப்பிலை கலந்து தெருக்களில் திறந்துவிடுகிறார்கள். அதேபோல், ஆற்காடு பகுதியில் கொரோனா பாதிக்காமல் இருக்க வீட்டு வாசலில் வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதில் அகல் விளக்கை ஏற்றி பெண்கள் வேண்டிக் கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு