Published:Updated:

How to: ஓபிசி சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for OBC certificate?

Representational Image ( Photo: Pixabay )

பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படும். அதை வீட்டிலிருந்தபடியே எப்படி அப்ளை செய்து பெறுவது என்பதைப் பார்க்கலாம்.

How to: ஓபிசி சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for OBC certificate?

பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படும். அதை வீட்டிலிருந்தபடியே எப்படி அப்ளை செய்து பெறுவது என்பதைப் பார்க்கலாம்.

Published:Updated:
Representational Image ( Photo: Pixabay )

நம் நாட்டில், சமூகத்தில் பின்தங்கியவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களுக்குப் படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் சமூக நீதி கிடைக்கச் செய்ய இடஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில், பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படும். அதை வீட்டிலிருந்தபடியே எப்படி அப்ளை செய்து பெறுவது என்பதைப் பார்க்கலாம்.

ஓபிசி சான்றிதழ் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

- ஓபிசி சான்றிதழ் பெற விரும்புகிறவர்கள் SC /ST போன்ற பிரிவின் கீழ் இருக்கக் கூடாது.

- BC, MBC, DNC பிரிவின் கீழ் வருபவர்கள் OBC சான்றிதழை அப்ளை செய்து பெற முடியும்.

எப்படி அப்ளை செய்வது?

தேவையான ஆவணங்கள்:

- ஆதார் அட்டை

- வருமானச் சான்றிதழ்

- பே ஸ்லிப்

- புகைப்படம்

- சொத்து விவரங்கள்

- வங்கிப் புத்தகம்

- ரேஷன் அட்டை

- வகுப்புச் சான்றிதழ்

- பான் எண்

- சுய உறுதிப் படிவம்

எப்படி ஆன்லைனில் அப்ளை செய்வது ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டெப் 1

* முதலில் TNeGA என்ற இணையதளத்தினை ஓபன் செய்து கொள்ளவும். அதன் முகப்புப் பகுதியில் பயனாளர் உள்நுழைவு/Citizen login என்ற தேர்வை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

* உள்நுழைந்ததும் Login செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே Register செய்திருந்தால் உங்களுடைய User Name, Password உள்ளீடு செய்து Login செய்யவும். புதிதாக Register செய்ய வேண்டுமென்றால் New User என்பதை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய சுயவிவரங்களையும், User Name மற்றும் Password ஆகியவற்றையும் உள்ளீடு செய்யவும். அதன்பின் Login பகுதிக்கு வந்து, நீங்கள் Register செய்யும்போது கொடுத்த User Name, Password ஆகியவற்றைக் கொடுத்தோ, உங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்தோ Login செய்யவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* உங்களுக்கான போர்டல் ஒன்று திறக்கும். அதில் Revenue Department என்ற பகுதியில், REV 115 - Other Backward Class என்பதை க்ளிக் செய்யவும்.

* உங்களுக்கான வழிமுறைகள் குறித்த பக்கம் ஒன்று திறக்கும். அதைச் சரியாகப் படித்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்துக்கொண்டு Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

* அடுத்ததாக உங்களுடைய CAN (The Common Account Number)ஐ Register செய்ய வேண்டும். உங்களுடைய CAN நம்பர் தெரிந்தால் Register செய்யவும். இல்லை என்றால், அந்தப் பகுதியின் கீழே உங்களுடைய ஆதார் குறித்தான விவரங்கள் கேட்கப்படும்; அதைச் சரியாகக் கவனித்து உள்ளீடு கொடுத்துவிட்டு Search என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய CAN நம்பர் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

ஓபிசி சான்றிதழ் பெற விண்ணப்பம்
ஓபிசி சான்றிதழ் பெற விண்ணப்பம்

அதை க்ளிக் செய்து, கீழேயே உங்களுடைய ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்யவும். பின் அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளீடு செய்துவிட்டு Proceed என்ற தேர்வை க்ளிக் செய்யவும்.

* அடுத்த பக்கத்தில், உங்களுடைய சுய விவரங்கள் அனைத்தும் இருக்கும். அதன் கீழே உங்களுடைய தொழில், வகுப்பு, படிப்பு, தந்தை, தாயின் சுயவிவரங்கள், வேலை தொடர்பான விவரங்களை இணைக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* அடுத்து, கேட்கப்படும் ஆவணங்களை ஒவ்வொன்றாக அப்லோடு செய்ய வேண்டும். அப்லோடு செய்வதற்கு ஏற்ற சைஸ்களில் ஆவணங்களை வைத்திருந்தால் எளிதாகப் பதிவேற்றம் செய்யலாம். அனைத்தையும் பதிவேற்றம் செய்தபின் அந்தப் பக்கத்தில் இருக்கும் Self declaration form-ஐ அப்படியே Download செய்து, பிரின்ட் எடுத்து, உங்களுடைய கையொப்பம் இட்டு, மறுபடியம் Soft copy ஆக upload செய்யவும். அல்லது, கணினியில் download செய்த பின்னர், அந்த Self declaration form-ஐ Adobe Reader பயன்படுத்தி கணினிலேயே கையொப்பம் இட்டு upload செய்யவும்.

- அனைத்தையும் upload செய்தபின், make payment என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே சென்று Terms and Conditions என்ற தேர்வை க்ளிக் செய்த பின் Make payment என்பதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு எந்த முறையில் பணம் செலுத்த முடியுமோ அதை க்ளிக் செய்து ரூபாய் 60-ஐ செலுத்தவும். பின் உங்களுக்கு ஒரு Acknowledgement slip கொடுக்கப்படும்.

இவ்வாறு எல்லாம் பூர்த்தி செய்து, அப்லோடு செய்த பின் உங்கள் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உங்கள் அலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். பின்னர், இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று சரிபார்க்கப்பட்டு 10 நாள்களுக்குள்ளாக உங்களுக்கு ஒபிசி சான்றிதழ் கிடைக்கப்பெறும்.

இந்த முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே உங்களுடைய வகுப்புச் சான்றிதழை நீங்கள் அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் அருகில் உள்ள இசேவை மையங்களுக்கு சென்றால் அவர்கள் உதவுவார்கள். அவர்கள் கொடுத்த Acknowledgement slipஐ 10 நாள்கள் கழித்து எடுத்துச் சென்று, உங்கள் OBC சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism