Published:Updated:

How to: ரேஷன் கார்டில் ஆன்லைனில் பெயரை நீக்குவது எப்படி? | How to remove name in ration card online?

ரேஷன் கார்டில் ஆன்லைனில் பெயரை நீக்குவது எப்படி
News
ரேஷன் கார்டில் ஆன்லைனில் பெயரை நீக்குவது எப்படி

ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்வதற்கு, இதற்கு முன் அனைவரும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதை ஆன்லைனிலேயே செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

அனைத்து இந்தியக் குடிமக்களும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியம். வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு வெள்ளை ரேஷன் கார்டு, வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு பிங்க் ரேஷன் கார்டு என்று வகைப்படுத்தி வழங்கப்படுகின்றன.

ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்வதற்கு, இதற்கு முன் அனைவரும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதை ஆன்லைனிலேயே செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

ஸ்டெப் 1
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும் (மாநிலத்துக்கு மாநிலம் இணையதள முகவரி மாறும்).

இணையதளம்
இணையதளம்

ஸ்டெப் 2
வலைதளத்தில் `பயனாளர் நுழைவு' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3

பிறகு, ரேஷன் கார்டில் எந்தத் தொலைபேசி எண்ணை இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணை, அங்குள்ள கட்டத்தில் உள்ளீடு செய்யவும். அடுத்ததாக, கேப்ட்சா (Captcha) எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, `பதிவு செய்' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 4

பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்து, `பதிவு செய்' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 5

குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர்/ சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ளதா என்பதன் விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஸ்டெப் 6

பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் `அட்டை பிறழ்வுகள்' என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பிறகு `புதிய கோரிக்கை' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 7

குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரிபார்கப்பட்ட பின், 'சேவையை தேர்வு செய்யவும்' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 8

கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் 'குடும்ப உறுப்பினர் நீக்க' என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 9

குறிப்பிட்ட நபரை எதற்காக நீக்கம் செய்கிறீர்கள் என்பதன் காரணத்தைக் குறிப்பிடவும்.

பெயர் நீக்கம்
பெயர் நீக்கம்

ஸ்டெப் 10

திருமணமாகிச் சென்ற மகள், உயிரிழந்த அப்பா என, குடும்ப உறுப்பினரின் பெயரை எதனால் நீக்கம் செய்கிறீர்களோ அதற்கான `ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்' என்பதை க்ளிக் செய்யவும்.

உதாரணமாக, மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவர் பெயரை நீக்கம் செய்ய வேண்டுமென்றால், அவரது திருமணச் சான்றிதழ் அவசியம். `திருமணச் சான்றிதழ்' என்பதை தேர்வு செய்த பிறகு, choose file என்பதை க்ளிக் செய்து, திருமண சான்றிதழை அப்லோடு செய்யவும். போட்டோ 1 MB அளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெப் 11

`உறுதிப்படுத்துதல்' என்பதை டிக் செய்து, `பதிவு செய்ய' என்பதை க்ளிக் செய்யவும். பிறகு 2, 3 நாள்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். நீக்கம் ஆனதை இணையதளம் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.

- வைஷ்ணவி