Published:Updated:

`19 மாநிலங்களில் பூஜ்ஜியம் பயனாளிகள்!' - பெயரளவில் செயல்படும் SC/ST-யினருக்கான திட்டம்

டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நலத்திட்டம் சிறப்பான திட்டமாக ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் விண்ணப்ப நடைமுறைகளில் உள்ள சிக்கலான விஷயங்கள், சாமான்ய, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடும் சவாலாக அமைந்துள்ளன.

`19 மாநிலங்களில் பூஜ்ஜியம் பயனாளிகள்!' - பெயரளவில் செயல்படும் SC/ST-யினருக்கான திட்டம்

டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நலத்திட்டம் சிறப்பான திட்டமாக ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் விண்ணப்ப நடைமுறைகளில் உள்ள சிக்கலான விஷயங்கள், சாமான்ய, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடும் சவாலாக அமைந்துள்ளன.

Published:Updated:

ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (Ministry of Social Justice and Empowerment) துறையின் கீழ் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நலத்திட்டம் செயல்பட்டுவருகிறது. சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்காக பிரத்யேகமாக எஸ்.சி.எஸ்.டி சிறப்பு சட்டங்கள் மூலம் மாநில அரசுகள் நிவாரணம் வழங்கிவந்தாலும், மத்திய அரசு தன் பங்குக்கு தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நிதி உதவி சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

சாதிய வன்கொடுமை, பாலியல் சித்திரவதை, படுகொலைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மற்றும் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை, மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட நலவாழ்வு அளிப்பது என்று வரையறுக்கப்பட்ட இத்திட்டத்துக்கு ஆரம்பத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

S.கார்த்திக்
S.கார்த்திக்

இதன் நடைமுறை செயல்பாடுகள் குறித்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தகவலறியும் உரிமைச் சட்டம் (RTI - The Right to Information Act) மூலம் ஆய்வு செய்தபோது, இத்திட்டம் முறையாகச் செயல்படாமல் பெயரளவில் இருப்பதை புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

28 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் 2017-18 நிதியாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வெறும் 137 பயனாளிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர். மீதம் 19 மாநிலங்களில் பூஜ்ஜியம் பயனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிகபட்சமாக குஜராத்தில் 70, உத்தரப்பிரதேசத்தில் 48 எனப் பயனாளிகள் இரு மாநிலங்களில் மட்டுமே அதிகபட்சமாகப் பயன் பெற்றுள்ளனர். மற்ற 7 மாநிலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை 5, 3, 2, 1 என ஒற்றை இலக்கு எண்ணிக்கையில் உள்ளது; மிக மிகக் குறைந்த அளவு பயனாளிகளே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

`19 மாநிலங்களில் பூஜ்ஜியம் பயனாளிகள்!' - பெயரளவில் செயல்படும் SC/ST-யினருக்கான திட்டம்

கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக ஒன்றிய அரசு நாடு முழுவதும் செலவிட்ட நிதி வெறும் ரூ. 4,79,95,000 மட்டுமே. அதில் தமிழகத்தில் ரூ.15,25,000 நிவாரணத் தொகையாக 5 பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைவிட மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடக மாநிலங்களில் இத்திட்டத்தால் பயனடைந்தவர்கள் எண்ணிக்கையும், நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, இதே காலகட்டத்தில் கர்நாடகா மற்றும் பஞ்சாபில் தலா ஒரே ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். அதுவும் மிக குறைந்தபட்சமாக கர்நாடக மாநிலப் பயனாளி ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நிதி உதவித் திட்டத்தில் இந்தியா முழுவதும் 2017-18 முதல் 2020-21 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு நிதியாண்டிலும், செலவான நிதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் ரூ.2,00,20,000 (இரண்டு கோடியே 20 ஆயிரம் வரை) செலவிடப்பட்டிருந்த நிலையில் படிப்படியாகக் குறைந்து கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.1,02,00,000 (ஒரு கோடியே இரண்டு லட்சம்) ஆக அது சுருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வருடம் - செலவான நிதி

2017-18 ரூ.2,00,20,000

2018-19 ரூ.1,14,75,000

2020-21 ரூ.1,02,00,000

2021-22 ரூ. 63,00,000

மொத்தம் - ரூ.4,79,95,000

கண்டறிந்தவை...

டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நலத்திட்டம் சிறப்பான திட்டமாக ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் விண்ணப்ப நடைமுறைகளில் உள்ள சிக்கலான விஷயங்கள், சாமான்ய, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடும் சவாலாக அமைந்துள்ளன. குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள் அவர்களது பல்வேறு ஆவணங்களையும் சரிபார்த்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான நீண்ட நடைமுறைகள் இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்களால் அதைச் செய்துமுடிக்க முடிவதில்லை. மேலும் படிக்காத பாமர மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தினர், இத்திட்டத்தைப் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மெத்தனமாக இருப்பது இத்திட்டம் செயல்பாடு குன்றியதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

இந்தியாவில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தன் சமீபகால அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்தில் 19 மாநிலங்களில் ஒரு பயனாளிகூட இல்லாமல் இருப்பது அதிர்ச்சி. இத்திட்டம் நடைமுறையில் முழுமையாகவும், அனைத்து மாநிலங்களிலும் சீராகவும் செயல்படுத்தப்படாமல், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாகப் பயன்படுத்துப்பட்டு வருவது குறிப்பிடப்பட வேண்டியது. இது, மற்ற மாநிலங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயனாளிகள் விவரம்
பயனாளிகள் விவரம்

பரிந்துரைகள்...

• டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நிதி உதவி சிறப்புத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு மாநில அரசுத் துறைகளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சமூக நலத்துறை இணைந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி பெற்றுத் தருவதில் துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை மாநிலத்துக்குக் கொண்டு சேர்க்கும் விதமாக சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட வேண்டும்.

- S.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism