Published:Updated:

``கோயில் உள்விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை!" - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

ஜீயர்

``கோயில் மரபுகளை மீறி, தன்னிச்சையாகச் செயல்பட்டுவரும் அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். கோயில் உள்விவகாரங்களில் தலையிடும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளைக் கண்டித்து சென்னையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” - ஜீயர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஶ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக, அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை அறநிலையத்துறை மீட்டுவருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சில அதிகாரிகள் செய்யும் தவற்றால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வழிபாட்டுமுறை குறித்து ராமானுஜர் வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழிமுறைகளை மாற்றிச் செயல்பட்டுவருகின்றனர். ஆச்சார்யா சம்பிரதாயம் உள்ள கோயில்களில் மரபு மீறப்பட்டுவருகிறது. கோயில் உள்விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை.

``கோயில் உள்விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை!" - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

ஆனால் ஆகம விதிகளை மீறி கோயில் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கோயிலில் அதிகாரியாக இருந்த ஜெயராம் என்பவர் விதிமுறைகளை மாற்றி அமைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இவ்வாறு மரபுகளை மீறி, தன்னிச்சையாகச் செயல்பட்டுவரும் அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். கோயில் உள்விவகாரங்களில் தலையிடும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளைக் கண்டித்து சென்னையில் வரும் நவம்பர் 11-ம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனக் கூறினார்.