Published:Updated:

உடன்பிறந்த ஐந்து மாற்றுத்திறனாளிகள்; திருமணமே செய்துகொள்ளாமல் பராமரித்துவரும் அக்கா

சுகுணா

மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் என உடன்பிறந்த ஐந்துபேருமே மாற்றுத்திறனாளிகள் என்பதால், திருமணமே செய்துகொள்ளாமல் தாயாக இருந்து 30 வருடங்களாக பராமரித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுகுணா.

உடன்பிறந்த ஐந்து மாற்றுத்திறனாளிகள்; திருமணமே செய்துகொள்ளாமல் பராமரித்துவரும் அக்கா

மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் என உடன்பிறந்த ஐந்துபேருமே மாற்றுத்திறனாளிகள் என்பதால், திருமணமே செய்துகொள்ளாமல் தாயாக இருந்து 30 வருடங்களாக பராமரித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுகுணா.

Published:Updated:
சுகுணா

மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் என உடன்பிறந்த ஐந்துபேருமே மாற்றுத்திறனாளிகள் என்பதால், திருமணமே செய்துகொள்ளாமல் தாயாக இருந்து 30 வருடங்களாகப் பராமரித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுகுணா. 50 வயதைக் கடந்துவிட்டாலே இன்னொருவரின் ஆதரவு தேவைப்படும். அப்படியிருக்க, 60 வயதை நெருங்கப்போகும் சுகுணா மாற்றுத்திறனாளிகளான தன் சகோதர சகோதரிகளை ஒற்றை மனுஷியாக பராமரித்து வருகிறார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிக்குச் சென்று யாரிடம் கேட்டாலும் ஒருவித பரிதாபத்தோடு வழிகாட்டுகிறார்கள். அந்தளவிற்கு, சுகுணாவின் வலியும் வேதனையும் அங்குள்ளவர்களின் முகத்திலேயே பிரதிபலிக்கிறது. அந்த குறுகலான தெருவுக்குள் சென்றால், எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் பரிதவிப்போடு வரவேற்கிறது அந்த ஹவுசிங் போர்டு கட்டிடம்.

தரை தளத்தில் உள்ள சுகுணாவின் வீட்டிற்குள் நாம் நுழைந்தோம். ஓர் அறையில் 50 வயது மதிக்கத்தக்க இருவர் கை, கால் இழுத்தபடி படுத்திருக்க, இன்னொரு அறையிலிருந்து இருவர் தவழ்ந்தபடியும் அமர்ந்தபடியும் நம்மை பார்க்கிறார்கள். உள்ளிருந்து வந்த சுகுணா நம்மை வரவேற்றுவிட்டு, “இருங்க தம்பிக்கு டயாப்பர் மாற்றிட்டு வர்றேன்” என்றபடி 57 வயது மதிக்கத்தக்க தம்பியைச் சிரமப்பட்டு தூக்கி டயாப்பர் மாற்றிவிட்டு பெருமூச்சுடன் வருகிறார். சில நிமிடங்கள் அதைப்பார்த்த நமக்கு, இதயமே கனத்து பெருமூச்சு ஏற்பட்டது. அவர்களின் வீட்டையொட்டியுள்ள கடல்தான் பரந்து விரிந்திருக்கிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையோ இரண்டு அறைகளுக்குள் வெளியுலகம் தெரியாமல் சுருங்கிப்போயுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நம்மிடம் பேசத்தொடங்கிய சுகுணா, ”எனக்கு 59 வயது ஆகுது. காலையில எழுந்ததும் பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டு போயி பாத்ரூம் போகவெச்சு, ப்ரஷ் பண்ணிவிட்டு, குளிக்க வெச்சு, சாப்பிட வைக்கிற வரைக்கும்னு தினம் தினம் குழந்தைங்களை பார்த்துக்குற மாதிரிதான் பார்த்துக்கிறேன். இதனாலேயே, எனக்கு உடம்புவலி வந்துடுச்சு. சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் தம்பியைத் தூக்கும்போது கீழே விழுந்து அடிபட்டுடுச்சு” என்று தனது ஒட்டுமொத்த வலியையும் சிறு புன்னகையோடு சொல்ல ஆரம்பித்தார். சுகுணாவின் வலி நிறைந்த வாழ்க்கையை வீடியோவில் காண: