Published:Updated:

`காற்றில் பறந்த சமூக விலகல்; வங்கியில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்!' - அச்சத்தில் தோகைமலை மக்கள்

வங்கி முன்பு திரண்ட மக்கள்
வங்கி முன்பு திரண்ட மக்கள் ( நா.ராஜமுருகன் )

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோகைமலை - வேதாச்சலபுரம் மெயின்ரோடு எதிரே உள்ள ஐ.ஓ.பி. வங்கியில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல், ஆபத்தை உணராமல் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டனர்.

தோகைமலை ஐ.ஓ.பி வங்கி முன்பு, சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால், வீட்டுக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அதுவும், ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஒருவர் உறுதி செய்யப்பட்ட பகுதி அது என்பதால், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அச்சத்தை விதைத்திருக்கிறது.

வங்கி முன்பு திரண்ட மக்கள்
வங்கி முன்பு திரண்ட மக்கள்
நா.ராஜமுருகன்
`26 ஆக உயர்ந்த எண்ணிக்கை; களமிறங்கிய 4 மாவட்ட மருத்துவர்கள்!' - கொரோனா தொற்றால் கலங்கும் கரூர்

உலகம் முழுக்க அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. அதற்காக, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதை மேலும் 16 நாள்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மக்கள் பலர் அந்த நோயின் தீவிரத்தை உணராமல், வெளியே கும்பல் கும்பலாகச் செல்வது ஊரடங்கை சரியாக கடைப்பிடிக்கும் மக்களுக்கும் மருத்துவத்துறைக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வங்கி முன்பு திரண்ட மக்கள்
வங்கி முன்பு திரண்ட மக்கள்
நா.ராஜமுருகன்

அப்படி, கரூர் மாவட்டம், தோகைமலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி முன்பு பணம் எடுப்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே, தோகைமலை - வேதாச்சலபுரத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தநிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், குளித்தலை சப்-கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் தோகைமலையில் ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, தோகைமலை - வேதாச்சலபுரம் பகுதியைத் தனிமைப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து, தீவிர சுகாதார நடவடிக்கைகளை ஒன்றிய அதிகாரிகள் எடுத்து, தொடர்ந்து அங்குள்ள நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோகைமலை - வேதாச்சலபுரம் மெயின்ரோடு எதிரே உள்ள ஐ.ஓ.பி. வங்கிக்கு நேற்று காலை சமூக விலகலை கடைப்பிடிக்காமல், ஆபத்தை உணராமல் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பதறியடித்துக்கொண்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

வங்கி முன்பு திரண்ட மக்கள்
வங்கி முன்பு திரண்ட மக்கள்
நா.ராஜமுருகன்

அதன்பேரில், தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் மற்றும் தோகைமலை காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து, வங்கியில் திரண்டிருந்தவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களை குறைந்தது 1 மீ சமூக விலகல் இடைவெளி விட்டு நிற்கச் செய்தும், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினியை உடனடியாகத் தெளித்தும், வங்கி வாடிக்கையாளர்களை கிருமிநாசினி பயன்படுத்தச் செய்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து வங்கியின் கிளை மேலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் வங்கி அதிகாரி கோகுல் ஆகியோரிடம் பேசினோம். "வங்கி பாஸ்புக், பணம் இருப்பு குறித்து என்ட்ரி போடவும், பணம் எடுக்கவும் வாடிக்கையாளர்கள் வந்தனர். கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து உள்ள நிலையில், பாதி அலுவலர்களைக் கொண்டு மக்களுக்காகச் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிலையைப் புரிந்துகொள்ளாமல், ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்தனர். சமூக விலகலை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.

வங்கி முன்பு திரண்ட மக்கள்
வங்கி முன்பு திரண்ட மக்கள்
நா.ராஜமுருகன்

பின்னர், போலீஸாருக்குத் தகவல் அளித்தோம். ஒன்றிய ஆணையர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து ஒழுங்குபடுத்தி, நடவடிக்கை எடுத்தனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தாக்கியும், இங்குள்ள மக்கள் சிலருக்கு அதன் தீவிரம் புரியவில்லை என்பது அதிர்ச்சியா இருக்கிறது" என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு