Published:Updated:

`கூகுள் மேப் தகவலால் சந்தேகப்படும் மனைவி!’ - மயிலாடுதுறை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த கணவர்

மயிலாடுதுறை காவல்நிலைம்
மயிலாடுதுறை காவல்நிலைம்

ஆரம்பத்தில் சுமுகமாகச் சென்ற இந்த விஷயம், காலப்போக்கில் கூகுள் மேப் காட்டும் இடம் தவறுதலாக இருந்ததால் அடிக்கடி வீட்டில் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.

கூகுளின் யுவர் டைம்லைன் (Google Map – Your Timeline) ஆப் தவறான தகவல்களை அளிப்பதாகவும், இதனால் குடும்பத்தில் சிக்கல் அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை காவல்நிலைம்
மயிலாடுதுறை காவல்நிலைம்

மயிலாடுதுறை பாலக்கரையில் ஜவுளி நிறுவனம் நடத்திவருபவர் சந்திரசேகர். இவரும் இவரின் மனைவியும் கூகுள் நிறுவனத்தின் மேப்பில் யுவர் டைம்லைன் என்ற வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

`கூகுள் மேப் காட்டிய பாதை' - ஊட்டி சரிவுப் பாதையில் வேனுடன் விடியவிடிய தவித்த ஓட்டுநர்!

ஆரம்பத்தில் சுமுகமாகச் சென்ற இந்த விஷயம், காலப்போக்கில் கூகுள் மேப் காட்டும் இடம் தவறுதலாக இருந்ததால் அடிக்கடி வீட்டில் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. சந்திரசேகர் சென்ற இடத்தைவிட அதிக தூரத்துக்குச் சென்றதாகக் காண்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் மேப்பின் யுவர் டைம்லைன் ஆப்பில் குறைபாடு உள்ளதால் தவறான இடங்களைக் காண்பித்து குடும்பத்தில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கணவன், மனைவி இருவரும் மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுள்ளனர்.

ஆனாலும் கூகுள் மேப் மூலம் சென்று வந்த இடங்களின் தகவல்களைப் பெறுவதை அவர்கள் கைவிடவில்லை. கணவன், மனைவிக்கு இடையே சண்டை அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது. இதுகுறித்து சந்திரசேகர் நேற்று மதியம் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார், அதில், ``நான் செல்லாத இடத்துக்குச் சென்றதாகக் காட்டும் கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கடந்த 4 மாதகாலமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்பட்டுள்ளது. உடனடியாக கூகுள் நிறுவனத்தினர் தவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். இதுவரை நடந்த தவற்றுக்கு கூகுள் நிறுவனத்தின்மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மயிலாடுதுறை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவிடம் பேசினோம். ``கணவன், மனைவி இருவரும் கூகுள் மேப்பை வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் சந்தேகப்படுகின்றனர். கணவர் புகார் தந்துள்ளார். இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளேன்" என்றார்.

`அமைதியான ஊர்.. மாட்டிவிட்ட கூகுள் மேப்..’ -பூட்டானில் எட்டாம் நாள் அனுபவம்! #MyVikatan
அடுத்த கட்டுரைக்கு