Published:Updated:

திண்டுக்கல்: `திருந்தி வாழுங்கள்... வேலை வாங்கித் தருகிறேன்!’ - அறிவுரையோடு எச்சரித்த இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டர்

`திருந்தி வாழும் எங்களுக்குக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் வேலை தர மறுக்கின்றனர் எனக் கூற வேண்டாம். அவ்வாறு யாரும் வேலை தர மறுத்தால் என்னிடம் கூறுங்கள். தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்த்துவிடத் தயாராக உள்ளேன்.”

திண்டுக்கல்: `திருந்தி வாழுங்கள்... வேலை வாங்கித் தருகிறேன்!’ - அறிவுரையோடு எச்சரித்த இன்ஸ்பெக்டர்

`திருந்தி வாழும் எங்களுக்குக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் வேலை தர மறுக்கின்றனர் எனக் கூற வேண்டாம். அவ்வாறு யாரும் வேலை தர மறுத்தால் என்னிடம் கூறுங்கள். தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்த்துவிடத் தயாராக உள்ளேன்.”

Published:Updated:
இன்ஸ்பெக்டர்

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக சேது. பாலாண்டி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவர் பொறுப்பேற்றவுடன், திண்டுக்கல் தாலுகா தாடிக்கொம்பு ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்தார். அப்போது அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சேது. பாலாண்டி அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினார்.

``நான் இந்தக் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரையிலும், அதற்குப் பிறகும் அரிவாள், கத்தி, கஞ்சா, போதை ஆகிய கலாசாரங்களில் இனிமேல் ஈடுபடக் கூடாது. குடும்பத்துடன் அரவணைத்துச் சென்றால் தவறு செய்யும் எண்ணம் வராது. தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு நேர்மையான, எந்த வகையான உதவியாக இருந்தாலும் கேட்டால் உடனடியாகச் செய்து தருகிறேன். குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் தங்களுக்கு வேலை தர மறுக்கின்றனர் எனக் கூற வேண்டாம். அவ்வாறு யாரும் வேலை தர மறுத்தால் என்னிடம் கூறுங்கள் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்த்துவிட தயாராக உள்ளேன்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

குற்றவாளிகளுக்குப் பின்புலம் யாராக இருந்தாலும், அவர்களையும் வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் சிறு குற்ற வழக்குகளில்கூட ஈடுபடக் கூடாது. இனிமேல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் பணிக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 குற்றவாளிகளை சேது.பாலாண்டி கைதுசெய்திருக்கிறார். கடந்த 2008-ல் எஸ்.ஐ-ஆகப் பணிக்குச் சேர்ந்து மதுரையில் சிலைமான், சத்திரப்பட்டி, கருப்பாயூரணி ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து மதுரை எஸ்.பி அலுவலகத்தில் தனிப்பிரிவில் பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில்தான் பதவி உயர்வுபெற்று திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார். திண்டுக்கல் நகரைவிட தாலுகாவில் அதிக குற்றச் செயல்கள் நடந்துவருகின்றன. இத்தகய சூழலில், புதிய இன்ஸ்பெக்டர், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், வழக்கு நிலுவையில் உள்ளவர்களை அழைத்து அறிவுரை கூறியது மட்டுமல்லாமல் எச்சரித்து அனுப்பியதை திண்டுக்கல் மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

சேது பாலாண்டி
சேது பாலாண்டி

இது குறித்து இன்ஸ்பெக்டர் சேது.பாலாண்டியிடம் பேசினோம். ``ஏற்கெனவே 25 பேரை அழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பியுள்ளேன். அவர்கள் `சிறு தவறும் செய்ய மாட்டோம். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடம் தொடர்பில் இருக்க மாட்டோம்’ என உறுதியளித்து சென்றுள்ளனர். அதேபோல மேலும் ஒரு லிஸ்ட் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். அந்த லிஸ்ட்டில் உள்ளவர்களையும் அழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். தாலுகா லிமிட் பெரியது என்றபோதிலும், இங்கு குற்றச்செயல்கள் நடக்காத வண்ணம் போலீஸார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் சக போலீஸாரிடம் ஆலோசித்துவருகிறேன். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைவிட அவர்களுக்குப் பின்புலத்தில் இருந்து இயக்குவோரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவிட்டால், பிரச்னை அடியோடு சரியாகிவிடும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism