Published:Updated:

ஒரு காலத்தில் கைம்பெண்கள் இல்லமாக இருந்த வி.இல்லத்தின் கதை!

விவேகானந்தர் இல்லம் | ஐஸ் ஹவுஸ்

சென்னையை தவிர கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களிலும் இத்தகைய ஐஸ்ஹவுஸ்களை கட்டி, கப்பலில் கொண்டு வரப்பட்ட ஐஸ்கட்டிகளைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தினர். ஆனால், இன்றைய தேதியில் அப்படியே உள்ளது இந்த ஒரு கட்டிடம்தான்.

ஒரு காலத்தில் கைம்பெண்கள் இல்லமாக இருந்த வி.இல்லத்தின் கதை!

சென்னையை தவிர கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களிலும் இத்தகைய ஐஸ்ஹவுஸ்களை கட்டி, கப்பலில் கொண்டு வரப்பட்ட ஐஸ்கட்டிகளைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தினர். ஆனால், இன்றைய தேதியில் அப்படியே உள்ளது இந்த ஒரு கட்டிடம்தான்.

Published:Updated:
விவேகானந்தர் இல்லம் | ஐஸ் ஹவுஸ்

இன்று சென்னை செல்லும் பலரும் பேருந்தில் செல்கையில் ’ஐஸ்ஹவுஸ் இறங்கு’ என்ற குரலையும், ’வி.இல்லம்’ என்ற பெயர் பலகையுடன் பேருந்துகள் ஓடுவதையும் காண்போம். அது பற்றி அறிவோமா!

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை என்ற பட்டியலில் கடல், ரயில் வண்டி, யானை, குழந்தையின் புன்னகை ஆகியவை இடம்பெறும். உலகின் இரண்டாவது நீளமான 13 கி.மீ கடற்கரையான நமது மெரினா கடற்கரை... கலங்கரை விளக்கம், நேப்பியர் பாலம் அண்ணா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம், கலைஞர் நினைவிடம், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, வள்ளுவர் சிலை என வரலாற்றுச் சின்னங்களோடு நீண்டு கிடக்கிறது.

மெரீனாவில் 2017-18 காலகட்டத்தில் யாருடைய தலைமையும் வழிகாட்டுதலும் இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான போராட்டம், இதோ இன்று மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் கால் நனைக்க வசதி என நீண்ட நெடிய வரலாறாக நீடிக்கிறது. மெரீனாவின் எதிரே வட்ட வடிவிலான ஊதா நிறக் கட்டிடமாக நிற்கும் இந்த ஐஸ் ஹவுஸ் பற்றி காண்போம்.

விவேகானந்தர் இல்லம் | ஐஸ் ஹவுஸ்
விவேகானந்தர் இல்லம் | ஐஸ் ஹவுஸ்
Wikimedia Commons
கால ஓட்டத்தில் ஐஸ் ஹவுஸ் 'மரைன் மேன்ஷன்' என்ற பெயரிலான கடற்படை வீரர்கள் தங்கும் விடுதியாக மாறியது. இந்த இடத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற சகோதரி சுப்புலட்சுமியை நினைவுகொள்ள வேண்டியது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வியாபாரத்தின் பொருட்டு இங்கிலாந்தில் இருந்து வந்திறங்கிய ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலான வியாபாரிகளாக அடியெடுத்து வைத்தனர். கடுமையான குளிர் பிரதேசமாக இருந்த இங்கிலாந்தில் இருந்து வந்திறங்கிய ஆங்கிலேயர்களுக்கு இங்கிருந்த இந்திய வெப்பச் சூழலை தாங்க முடியாத நிலை. வியாபாரத்தின் பொருட்டு இந்தியா வந்தவர்கள் நாளடைவில் இந்தியாவை ஆட்சி செய்பவர்களாக மாறிப் போனது வரலாறு. வெப்பச் சூழலை தவிர்க்க குளிர்ந்த இடங்களை தேடினர். அவ்வாறு ஆங்கிலேயர்கள் தங்களுடைய வசதிக்காக தேடிக் கண்டுபிடித்த இடமே இப்போதும் நமது கோடை வாசஸ்தலமாக உள்ள உதகை. ஊட்டி என்ற உதகமண்டலத்துக்கு ஆங்கிலேயர் அமைத்த மலை ரயில் பாதைதான் உலகின் பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்!

இப்படியாக வெப்பச் சூழலில் இருந்து தப்பிக்க, இங்கிலாந்தில் இருந்து பெரிய பெரிய ஐஸ் கட்டிகளை கப்பலில் கொண்டுவந்து பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதே இப்போதும் உள்ள ஐல்ஹவுஸ். கப்பலில் கொண்டு வந்து இறக்கப்பட்ட ஐஸ்கட்டிகள் உருகி விடாமல் பாதுகாப்பாக இருக்க உயரமான சுவர்கள், அகலமான சுவர்களோடு, சன்னல்கள் இல்லாத கட்டிடமாக அமைத்தனர். ஐஸ்கட்டிகள் வேண்டுமென கேட்டவர்களுக்கும் ஒரு ஐஸ் கட்டி நாலணா என்கிற விலையில் விற்பனை செய்தனர். இதனால் இந்த கட்டிடத்துக்கு ஐஸ்ஹவுஸ் என்று பெயராகிப் போனது. சென்னையை தவிர கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களிலும் இத்தகைய ஐஸ்ஹவுஸ்களை கட்டி, கப்பலில் கொண்டு வரப்பட்ட ஐஸ்கட்டிகளைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தினர். ஆனால், இன்றைய தேதியில் அப்படியே உள்ளது இந்த ஒரு கட்டிடம்தான். கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் இருந்த ஐஸ்ஹவுஸ்கள் இப்போது இல்லை. 1842-ம் ஆண்டில் கட்டப்பட்ட மெட்ராஸ் ஐஸ் ஹவுஸ் மட்டுமே இன்றும் நிலைத்து நிற்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கால ஓட்டத்தில் ஐஸ்ஹவுஸ் 'மரைன் மேன்ஷன்' என்ற பெயரிலான கடற்படை வீரர்கள் தங்கும் விடுதியாக மாறியது. இந்த இடத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற சகோதரி சுப்புலட்சுமியை நினைவுகொள்ள வேண்டியது அவசியம். ஆம், அவர்தான் சில காலம் இந்தக் கட்டிடத்தில் 'விதவைகள் இல்லம்’ எனும் கைம்பெண்கள் காப்பகத்தை நடத்தி வந்தார். தன்னுடைய பதினோரு வயதில் கைம்பெண்ணாக ஆன இவர்தான், டிகிரி பட்டம் பெற்ற சென்னை மாகாண முதல் பெண்மணி. வி.இல்லம் என்றவுடன் கைம்பெண்கள் இல்லமாக இருந்ததன் நினைவாகவோ என நினைக்க வேண்டாம்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் வரலாற்றுப் புகழ்மிக்கச் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897-ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை 9 நாட்கள் இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்தபோது அவர் புகழ்பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

விவேகானந்தர் இல்லம் | ஐஸ் ஹவுஸ்
விவேகானந்தர் இல்லம் | ஐஸ் ஹவுஸ்

9 நாட்கள் விவேகானந்தர் இருந்த கட்டிடத்தில் தங்கியதன் நினைவாக விவேகானந்தர் தொடர்பான புத்தகங்களை வைத்துக் கொள்ளவும், அவர் தொடர்பான பொருட்களைக் காட்சியாக வைத்து விவேகானந்தர் இல்லமாக பராமரிக்க வேண்டுமென சென்னை ராமகிருஷ்ணா கல்லூரி, மண்டப நிர்வாகம் சார்பாக 1997-ம் ஆண்டு சிகாகோ உரையின் நூற்றாண்டு விழா கொண்டாடத்தின்போது தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதைத் தொடர்ந்து1997 டிசம்பர் 24 அன்று ரூபாய் 1,000 வீதம் கட்டணமாக மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ராமகிருஷ்ண மடத்துக்கு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு இல்லத்தின் நுழைவு வாயிலுக்காக அருகில் இருந்த இடத்தை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்கு கேட்க, அதனை ஏற்ற தமிழக அரசு 90 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடம் 1998 ஜீன் 10 அன்று, சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் மூ‌ன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு ஜீன் 28 அன்று சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் பத்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ண மடம் அந்த இல்லத்தை புதுப்பிக்க விவேகானந்தர் தொடர்பான நிரந்தர கண்காட்சி கூடத்தை அமைக்க, புதுப்பிக்கப்பட்ட இல்லத்தை அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.

2008-ம் ஆண்டில் உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மையத்திற்காக வி.இல்லம் கேட்க பட்டதாக செய்தி வந்த நிலையில், 2010 ஜனவரி 28 அன்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இன்றுவரை ஐஸ்ஹவுஸ் பேருந்து நிறுத்தம் வி.இல்லம் என்ற பெயர் பலகையோடு காட்சியளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism