Published:Updated:

`சுர்ஜித்தை இப்படித்தான் மீட்போம்!' - ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களின் லைவ் ரிப்போர்ட்

சுர்ஜித்தை மீட்கும் பணி
News
சுர்ஜித்தை மீட்கும் பணி

2 வயதுக் குழந்தை சுர்ஜித்தை மீட்கச் சென்ற அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி நிபுணர்கள் மீட்புப் பணிகளில் சந்தித்துவரும் சவால்கள் குறித்த தகவல்களை நம்மிடம் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள 600 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதுக் குழந்தை சுர்ஜித் தவறி கீழே விழுந்தான். அவனை மீட்க கடும் போராட்டம் நடந்துவருகிறது. 15-க்கும் மேற்பட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. தற்போது சிறுவன் சுர்ஜித் விழுந்துள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் புதியதாக ஆழ்துளைக் கிணறு ரிக் இயந்திரம் மூலம் போடப்பட்டுவருகிறது. 45 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் துளை போடும் பணிகள் நடந்துவருகின்றன.

சுர்ஜித் மீட்கும் பணி
சுர்ஜித் மீட்கும் பணி

சுர்ஜித்தை மீட்க அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 8 பேர் கொண்ட டீம் திருச்சி நடுக்காட்டுப்பட்டிக்குச் சென்றது. அந்த டீம் கையோடு ரோபோ, தெர்மோ கேமரா ஆகியவற்றைக் கொண்டு சென்றது. காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரம்பாக்கம் அருகே அண்ணா பல்கலைக்கழக டீம் சென்றபோது அந்தப் பகுதியில் நடந்த விபத்து காரணமாக 2 மணி நேரம் தாமதமானது. இருப்பினும் சம்பவ இடத்துக்குச் சென்ற அண்ணா பல்கலைக்கழகக் குழு தங்களிடமிருந்த தெர்மோ கேமராவை சர்ஜித் தவறி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கினர். கடந்த 26-ம் தேதி 8.30 மணியளவில் சுர்ஜித்தின் உடல் வெப்பச்சூடு 28 டிகிரியாக (நார்மல் 32 டிகிரி) இருந்ததை தெர்மோ கேமரா மூலம் மீட்புக் குழுவினர் அறிந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து சுர்ஜித்துக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் புதிதாகத் துளைபோடும் பகுதியில் உள்ள பாறைகளை உடைப்பதற்கான நடவடிக்கைகளை மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகக் குழுவைப்போல ஐஐடியிலிருந்தும் ஒரு குழு திருச்சிக்குச் சென்றது. அந்தக் குழுவினரும் தங்களால் முடிந்ததை செய்து உதவியுள்ளனர்.

சுர்ஜித் மீட்கும் பணி
சுர்ஜித் மீட்கும் பணி

சுர்ஜித்தை மீட்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்தும் மீட்புக் குழுவினர் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அண்ணா பல்கலைக்கழக டீம் ஐஐடி டீம் ஆகியோர் நம்மிடம் கூறுகையில், ``சுர்ஜித்தை ஒவ்வொரு முறையும் மேலே தூக்க முயற்சி செய்தபோது அது பலனிக்கவில்லை. மாறாக, ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுர்ஜித் சென்றான். அதை எங்களால் தடுக்க முடியவில்லை. இதனால்தான் ஹைட்ரோலிக் பிரசர் மூலம் சிறுவன் மேலும் ஆழத்துக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் 80 அடியிலிருந்து 90 அடி ஆழத்துக்குள் இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதியதாகத் துளைபோட்டு அதற்குள் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று சிறுவன் சுர்ஜித்தை மீட்க உள்ளனர். இதற்காக, 100 அடி ஆழத்துக்குத் துளைபோடும் பணி நடந்துவருகிறது. அதன் பிறகு அதற்குள் இறங்கும் தீயணைப்பு வீரர்கள் கையால் லேசர் உதவியுடன் நவீன கருவி மூலம் பக்கவாட்டில் துளைபோட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு எளிதாக சிறுவன் சுர்ஜித்தை மேலே தூக்கிவந்துவிடலாம். இதுதான் மீட்பு குழுவினரின் திட்டம். சிறுவன் சுர்ஜித் விழுந்துள்ள இடத்தில் உடைக்க முடியாத அளவுக்கான பாறைகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பாறைகளை வெடி பொருள்கள் மூலம் உடைத்து துளைபோடலாம். அவ்வாறு செய்ய முடியாத சூழல் உள்ளது. வெடி பொருள்களைப் பயன்படுத்தினால் கடும் அதிர்வுகள் ஏற்படும். அதனால் சுர்ஜித்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால்தான், அதிர்வுகள் இல்லாமல் துளைபோடும் பணிகள் நடந்துவருகின்றன.

சுர்ஜித் மீட்கும் பணி
சுர்ஜித் மீட்கும் பணி

போர்வெல் இயந்திரம் மூலம் துளைபோட்டு அதன் பிறகு, ரிக் இயந்திரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதே வேகத்தில் தடையில்லாமல் மீட்புப் பணிகள் நடந்தால் இன்றுக்குள் சிறுவன் சுர்ஜித்தை வெளியில் கொண்டு வந்துவிட முடியும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழியில் இறங்குவதற்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தெர்மல் கேமராவை பயன்படுத்தவும் திட்டம் உள்ளது. இந்தக் கேமரா எல்லா திசைகளிலும் சுழலும். இதனால் குழிக்குள் என்ன நடக்கிறது என்பதை மேலிருப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும்" என்றனர்.