Published:Updated:

`தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாறும் விடுதிகள்!’ -மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி
ஐஐடி

ஐஐடிக்கு அடையாறு, வேளச்சேரி மற்றும் தரமணி என்று மூன்று நுழைவாயில்கள் உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்காக, மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத தரமணி நுழைவாயில் அருகிலுள்ள விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அடையாரில் உள்ள சென்னை ஐஐடி வளாகம் சுமார் 620 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 20 மாணவர் விடுதிகள் உள்ளன. அதில் ஐந்து விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சியால் பயன்படுத்தப்படவுள்ளன. மாணவர்கள் மட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் ஐஐடி வளாகத்தில் தங்கியிருப்பதால், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள விடுதிகளே கண்காணிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஐஐடிக்கு அடையாறு, வேளச்சேரி மற்றும் தரமணி என்று மூன்று நுழைவாயில்கள் உள்ளன . தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்காக, மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத தரமணி நுழைவாயில் அருகிலுள்ள விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு
representational image

கல்லூரி வளாகத்தில் தற்போது எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை. கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, போதிய இடமில்லாத பட்சத்திலேயே மாணவர்கள் விடுதி பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த நாளே, அங்கு தங்கி படித்துவரும் வெளிநாட்டு மாணவர்களைத் தவிர மற்ற உள்நாட்டு மாணவர்கள் விடுதிகளை காலி செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வியில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாமலிருக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

`தனிமைப்படுத்தப்பட்ட 300 செவிலியர்கள்; 40 பேருக்குக் கொரோனா' - சோகத்தில் மும்பை மருத்துவமனை

கொரோனா தாக்கத்தால் பல இறுதியாண்டு மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். ஆனால் வேலையிழந்த மாணவர்களுக்குச் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். கல்லூரி நிர்வாகமும் நிறுவனங்களிடம் 2019-20 கல்வியாண்டிற்கான வேலைவாய்ப்புகளை ரத்து செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. கொரோனா பாதிப்பால் மாணவர்களின் உயர்கல்வி திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை எண்ணி கவலைகொள்ளாமல், மாணவர்கள் தங்களது உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்துமாறு மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

ஐஐடி மெட்ராஸ் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள் அம்மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. கடந்த மாதம் பவாயில் உள்ள ஐஐடி பாம்பேவின் விடுதிகளும் மும்பை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க, விடுதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐஐடி பாம்பே கொரோனா கண்காணிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை அக்கல்லூரியின் ஊழியர்கள் கூட்டமைப்பு கடுமையாகக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு தங்கியுள்ள ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஒப்புதலைப் பெறாமலே கல்லூரி வளாகம் மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை அக்கூட்டமைப்பு வைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு