Published:Updated:

ஊருக்கு வெளியே பேருந்து நிலையம்... அமைச்சருக்கு எதிராக இளையான்குடியில் தொடரும் போராட்டங்கள்!

பூமி பூஜையின்போது...

``பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இளையான்குடி நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, உள்ளுர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு அமைச்சர் பெரியகருப்பனால் அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டுள்ளது.”

ஊருக்கு வெளியே பேருந்து நிலையம்... அமைச்சருக்கு எதிராக இளையான்குடியில் தொடரும் போராட்டங்கள்!

``பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இளையான்குடி நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, உள்ளுர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு அமைச்சர் பெரியகருப்பனால் அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டுள்ளது.”

Published:Updated:
பூமி பூஜையின்போது...

ஊர்மக்கள், வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி ஊரைவிட்டு வெகு தூரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைச்சரும் அதிகாரிகளும் ஆர்வம் காட்டுவதை எதிர்த்து இளையான்குடி மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

கடந்த மாதம் நடந்த கடையடைப்பு
கடந்த மாதம் நடந்த கடையடைப்பு

தமிழ்க்குடிமகன், வ.து.நடராஜன், ராஜகண்ணப்பன் எனப் பல பிரபலங்கள் வெற்றிபெற்ற சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடித் தொகுதி 10 வருடங்களுக்கு முன்பு மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாரம்பர்யம்மிக்க இளையான்குடி பேரூராட்சியில், பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, விரிவுபடுத்தித் தர மக்கள் கோரிக்கை வைத்துவந்ததை, மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி பரிசீலித்துவந்த நிலையில், இளையான்குடியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவிட்டு, அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெரியகருப்பன்
பெரியகருப்பன்

மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கும் அமைச்சருக்கு எதிராக வியாபாரிகளும், இளையான்குடி மக்களும் கடையடைப்பு, போராட்டம் என்று நடத்தி, கலெக்டர் முதல் முதலமைச்சர் வரை மனு அனுப்பிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மிடம் பேசிய இளையான்குடி புதிய பேருந்து நிலைய எதிர்ப்புக்குழுவினர், "மக்களுக்குப் பயன்படும் வகையில்தான் எந்தத் திட்டத்தையும் கொண்டுவர வேண்டும். டெண்டர் கமிஷனுக்காகக் கிடைக்கிற இடத்தில் அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதால், அரசுக்கும் மக்களுக்கும்தான் இழப்பு ஏற்படும். இப்படித்தான் சில ஊர்களில் ரொம்ப தூரத்துல பஸ் ஸ்டாண்ட் கட்டி அது பயன்படாமலே கெடக்குது.

இப்ப எங்க ஊருக்கு நடுவுல எல்லோரும் வந்து சின்னதா இருக்கும் பஸ் ஸ்டாண்டை, அருகில் பயன்படாமல் இருக்கும் அரசுக் கட்டடங்களை இடித்து விரிவுப்படுத்தினால் எல்லோருக்கும் பிரயோசனமா இருக்கும். எங்கள் பிரச்னையை எம்.எல்.ஏ தமிழரசியிடம் சொன்னதுக்கு அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனால், அமைச்சர்தான் விடாப்பிடியா ஊருக்கு வெளியே பஸ் ஸ்டாண்டு கட்டறதுல தீவிரமா இருக்காரு. இதைப்போய் அவர்கிட்டே முறையிட்டதுக்கு அவமானப்படுத்தி அனுப்பிட்டாரு" என்றனர்.

கண்டன போஸ்டர்
கண்டன போஸ்டர்

ஊர்மக்கள் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், "புதிய பேருந்து நிலையத்துக்கான இடம் நகரிலிருந்து 3 கி.மீ தள்ளி வெகுதொலைவில் உள்ளது.

அந்த இடத்துக்கு எதிரில் சுடுகாடும் கண்மாயும் உள்ளன. தொலைவில் உள்ளதால் பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். நமது மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கையிலும் பக்கத்தில் பரமக்குடியிலும், ராமநாதபுரத்திலும் நகருக்குள்ளேயே பழைய பேருந்து நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. மக்களுக்கும் இதுவே வசதியாக உள்ளது.

திருப்புவனத்தில் தொலைவில் அமையும் என்ற அச்சத்திலேயே புதிய பேருந்து நிலையமே தேவையில்லை என்று மக்கள் மறுத்துவருகிறார்கள். விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பயனற்று உள்ளது.

ஊருக்கும் மக்களுக்கும் பயன்படாத புதிய பேருந்து நிலைய இடத் தேர்வையும், டெண்டரையும் ரத்துசெய்து தற்போதைய பேருந்து நிலையத்தில் உள்ள பழுதடைந்த பேரூராட்சி அலுவலகம், மருத்துவமனை, பள்ளி இவற்றை அகற்றி இந்தப் பேருந்து நிலையத்தையே விரிவாக்கம் செய்ய வேண்டும்.

பூமி பூஜையின்போது...
பூமி பூஜையின்போது...

பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் அனைத்துச் சமூக அமைப்புகள், வியாபாரிகளுடன் இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்தினோம்.

இது குறித்து அமைச்சர் பெரியகருப்பனிடம் முறையிட்டோம். சந்தித்து மனு அளித்தோம். அவரோ மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் பேசினார்.

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 24-ம் தேதி அன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதன் பின்பு ஆர்.டி.ஓ தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி மார்ச் 30 வரை அமைதிகாக்கும்படி உத்தரவாதம் அளித்தார்கள்.

இதை ஏற்று முற்றுகைப் போராட்டத்தைத் தள்ளிவைத்தோம். ஆனால் ஏமாற்றிவிட்டார்கள். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலும் இதே இடம் தேர்வுசெய்யப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்போதைய எம்.எல்.ஏ நாகராஜன் இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்.

வியாபாரிகள் அறிவிப்பு
வியாபாரிகள் அறிவிப்பு

தற்போது மீண்டும் இத்திட்டம் கையிலெடுக்கப்பட்டு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இளையான்குடி நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, உள்ளுர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு அமைச்சர் பெரிய கருப்பனால் அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டுள்ளது.

எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு இளையான்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டுகிறோம்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "ஊர்மக்களின் எதிர்கால நலன் கருதி, போக்குவரத்து வாகனங்களின் பெருக்கத்தைக் கணக்கிட்டு ஊருக்குத் தொலைவில் விசாலமான இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதே சரியானதாக இருக்கும். அப்போதுதான் நகரம் வளர்ச்சி பெறும்" என்கிறார்கள்.

அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராகக் கண்டனங்களை தெரிவித்துவரும் மக்கள், அடுத்தகட்ட போராட்டத்துக்குத் தயாராகிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism